News October 5, 2025
நவ.22-க்குள் பிஹார் தேர்தல்

பிஹார் தேர்தலில் 17 புதிய நடைமுறைகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் தெரிவித்துள்ளார். இந்த புதிய நடைமுறைகள், இனி அனைத்து தேர்தல்களிலும் நடைமுறைப்படுத்தப்படும் எனவும், பிஹார் தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடிகளும் ஆன்லைனில் கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், நவ.22-க்குள் பிஹாரில் தேர்தல் நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 5, 2025
ஒரே வாரத்தில் பாத வெடிப்பு மறைய TIPS

➤விளக்கெண்ணெய் 20 மில்லி எடுத்துக்கொள்ளுங்கள் ➤அதை அடுப்பில் வைத்து 2 சின்ன வெங்காயம், 1 சிட்டிகை மஞ்சள் சேர்க்கவும் ➤அடுப்பில் இருந்து இறக்கி ஆற வையுங்கள் ➤1 சிட்டிகை உப்பு சேர்த்து, மிக்ஸியில் போட்டு பேஸ்ட் போல் அரைத்துக்கொள்ளுங்கள் ➤காற்று புகாத டப்பாவில் அடைத்து ஃபிரிட்ஜில் வையுங்கள் ➤தினமும் இரவு, வெடிப்பு உள்ள இடத்தில் தடவி அப்படியே விடுங்கள் ➤ 1 வாரத்திலேயே பலன் கிடைக்கும். SHARE.
News October 5, 2025
ஆணவத் திமிருக்கு எதிராக TN போராடும்: CM ஸ்டாலின்

தமிழ்நாடு யாருடன் போராடும்? என ஆளுநர் கேட்டதற்கு, இந்தி மொழியை ஏற்றுக்கொண்டால்தான், கல்வி நிதியைக் கொடுப்போம் என கூறும் ஆணவத் திமிருக்கு எதிராகப் போராடும் என CM ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மனுதர்மத்தை நிலைநாட்டத் துடிக்கும் ஆதிக்க வெறியர்களுக்கு எதிராகவும், தமிழ்நாட்டு மக்களிடையே குழப்பத்தை உண்டாக்க மட்டுமே பணியாற்றும் ஆளுநருக்கு எதிராகவும் தமிழ்நாடு போராடும் என்று அவர் கூறியுள்ளார்.
News October 5, 2025
சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் மாநிலம் இதுதான்!

உள்நாட்டு சுற்றுலாவில், ராஜஸ்தான், பெருமளவிலான பயணிகளை கவர்ந்து வருகிறது. கோவா, கேரளா மாநிலங்களை விட அதிகளவிலான மக்கள், குறைந்த செலவில் அனுபவமிக்க பயணத்தை தரும் ராஜஸ்தானுக்கு படையெடுக்கின்றனர். அதன் அமைதியான பாலைவனம், பாரம்பரிய நகரங்கள், அரண்மனைகள், கோட்டைகள், வண்ணமயமான விழாக்கள் ஆகியவை மக்களை ஈர்க்கின்றன.