News August 12, 2024
பிஹார்: கோயிலில் கூட்ட நெரிசலில் சிக்கி 7 பேர் பலி

பிஹார் ஜெகனாபாத்தில் உள்ள பாபா சித்தேஷவர்நாத் கோயிலில் இன்று காலை ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 7 பக்தர்கள் உயிரிழந்தனர். காயமடைந்த 35 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில், ஒரு சிலர் கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. புனித ஸாவான் மாதத்தின் 4வது திங்கட்கிழமை காரணமாக கோயிலில் கூட்டம் அதிகரித்ததால் விபரீதம் ஏற்பட்டுள்ளது.
Similar News
News March 5, 2026
வங்கி கணக்கில் ₹11,000… முதல்வர் அறிவித்தார்

புதுச்சேரியிலும் தேர்தல் வரவிருக்கும் நிலையில், அம்மாநில முதல்வர் ரங்கசாமி அடுத்தடுத்த அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதன்படி, பயிறு வகைகள், எள்ளுக்கு ₹6,000, பாரம்பரிய நெல், வேர்க்கடலைக்கு ₹7,000, கரும்பு, பருத்தி உற்பத்தி செய்வோருக்கு மானியமாக ₹11,000 வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உயர்த்தப்பட்ட மானியம் 2026 -27 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
News March 5, 2026
படிக்க காசு இல்லையா? இதோ அரசு திட்டம்!

உயர்கல்வி படிக்க வசதியில்லாத மாணவர்களுக்கு ₹10 லட்சம் வரை பிணையம் இல்லாமல் கடன் வழங்குகிறது மத்திய அரசின் PM வித்யாலட்சுமி கல்விக் கடன் திட்டம். மெரிட்டின் அடிப்படையில் சீட் பெறும் மாணவர்களுக்கு மட்டுமே கடன் வழங்கப்படும். வாங்கிய கடனை செலுத்தமுடியாமல் போனால், வட்டியில் 3% மானியம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற இங்கே <
News March 5, 2026
BREAKING: பள்ளிகளில் தடை.. தமிழக அரசு உத்தரவு

தனியார் பள்ளிகளில் அரசியல், மதம் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்த தமிழக அரசு தடை விதித்துள்ளது. தனியார் பள்ளிகள் ஒழுங்குமுறை விதிகளில் திருத்தம் செய்து TN அரசு அரசிதழில் வெளியிட்டுள்ளது. அதில், பிரிவினைகளை தூண்டும் நிகழ்ச்சி, கல்வி நோக்கத்திற்கு தொடர்பில்லாத நிகழ்ச்சி உள்ளிட்டவற்றை நடத்தவும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனை அனைத்து தனியார் பள்ளிகளும் கண்டிப்பாக பின்பற்றுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.


