News August 17, 2024
பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து: PM மோடி

பயங்கரவாதத்தால் மிகப்பெரும் ஆபத்து உருவாகி இருப்பதாக PM மோடி எச்சரித்துள்ளார். “வாய்ஸ் ஆப் குளோபல் சவுத்” மாநாட்டில் பேசிய அவர், பயங்கரவாதம், தீவிரவாதம், பிரிவினைவாதம் ஆகியவை மிகப்பெரிய ஆபத்தாக உருவெடுத்திருப்பதாகக் கூறினார். தொழில்நுட்ப பிரிவினை, தொழில்நுட்பத்தால் உருவான சமூக சவால்கள் மற்றும் பிற பொருளாதார சவால்கள் நம் முன் பிரச்னையாக உருவெடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
Similar News
News December 21, 2025
தோனிக்கு பிறகு ஜிதேஷ் சர்மா சிறப்பாக செய்தார்: கவாஸ்கர்

T20 உலகக் கோப்பைக்கான இந்திய அணியில் ஜிதேஷ் சர்மா இடம்பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்தது. இந்நிலையில், ஜிதேஷ் எந்த தவறும் செய்யவில்லை, அவருக்கு கிடைத்த வாய்ப்புகளில் சிறந்த விக்கெட் கீப்பராக இருந்தார் என சுனில் கவாஸ்கர் ஆதரவு தெரிவித்துள்ளார். அத்துடன், MS தோனிக்கு பிறகு DRS-களில் கேப்டனுக்கு சிறப்பாக உதவியுள்ளார் என்றும் ஜிதேஷின் திறமையை சுட்டிக்காட்டியுள்ளார். உங்கள் கருத்து என்ன?
News December 21, 2025
ரஜினியிடம் பேசியதில் மிளகு ரசமே கிடைத்தது: தமிழருவி

ரஜினி கட்சி தொடங்காததற்கு தமிழருவி மணியனே காரணம் என்றும், கட்சி தொடங்குவதற்கு முன்பாகவே ₹200 கோடியை ரஜினியிடம் வாங்கியதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்த தமிழருவி, தான் ரஜினியிடம் இருந்து பணம் ஏதும் வாங்கவில்லை என தெரிவித்துள்ளார். அவரை சந்தித்தபோது மிளகு ரசம் மட்டுமே கிடைத்தது, 3 முறை சந்தித்ததில் 3 கோப்பை மிளகு ரசம்தான் அருந்தினேன் என்றும் கூறியுள்ளார்.
News December 21, 2025
டிசம்பர் 21: வரலாற்றில் இன்று

*1768 – நேபாள ராஜ்ஜியம் தோற்றுவிக்கப்பட்டது.
*1913 – உலகின் முதலாவது குறுக்கெழுத்துப் போட்டி ‘நியூயோர்க் வேர்ல்ட்’ பத்திரிகையில் வெளியானது.
*1937 – பண்ருட்டி ராமச்சந்திரன் பிறந்தநாள்.
*1948 – EVKS இளங்கோவன் பிறந்தநாள்.
*1985 – ஆண்ட்ரியா பிறந்தநாள்.
*1989 – தமன்னா பிறந்தநாள்.


