News April 26, 2025
மிகப்பெரிய என்கவுன்டர்.. 37 பேர் பலி?

தெலங்கானா-சத்தீஸ்கர் எல்லையில் உள்ள கர்ரேகுட்டாவில் துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்கிறது. நூற்றுக்கணக்கான மாவோயிஸ்டுகள் இருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து, பாதுகாப்புப் படையினர் தீவிர தேடுதல் வேட்டையைத் தொடங்கினர். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் 37 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Similar News
News April 27, 2025
ஸ்டீவ் ஜாப்ஸ் பொன்மொழிகள்

*உங்கள் நேரம் குறைவு, எனவே மற்றவர்களின் வாழ்க்கையை வாழ்ந்து வீணாக்காதீர்கள். *புதிய யோசனைகளை உருவாக்கி செயல்படுத்துபவர்களே உண்மையான தலைவர்கள். *எதிர்காலத்தை கணிக்க சிறந்த வழி அதை உருவாக்குவது தான். *சில சமயங்களில் வாழ்க்கை உங்கள் தலையில் ஒரு செங்கல்லால் அடிக்கும். நம்பிக்கையை இழக்காதீர்கள். *நீங்கள் செய்யும் வேலையை நேசித்து, அதில் சிறந்து விளங்க முயற்சி செய்யுங்கள்.
News April 27, 2025
அது தோனிக்கும் தெரியும்: ரெய்னா

இந்த முறை சரியான வீரர்களை ஏலத்தில் எடுக்கவில்லை என்பது தோனிக்கு தெரியும் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார். 43 வயதிலும் ஒரு கேப்டனாக தோனி அணிக்கு பாடுபடுவதாக கூறிய அவர், ₹18 கோடி, ₹17 கோடி என சம்பளம் வாங்கும் வீரர்கள் ஒழுங்காக விளையாடாமல், கேப்டனுக்கும் பதில் கூறாமல் இருப்பதாகவும் சாடியுள்ளார். மேலும், இந்த முறை ஏலத்தின் போது வீரர்கள் தேர்வில் தோனி அதிகமாக ஈடுபடவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.
News April 27, 2025
பாக். ராணுவத்திடம் சிக்கிய வீரரின் நிலை என்ன?

தவறுதலாக எல்லை தாண்டியதாக கைது செய்யப்பட்ட எல்லை பாதுகாப்பு படை வீரர் பூர்ணம் குமாரை ஒப்படைக்க பாக். ராணுவம் மறுத்து வருகிறது. கடந்த புதன்கிழமை கைது செய்யப்பட்ட நிலையில், தொடர்ந்து 3 நாள்களாகியும், பல கட்ட பேச்சுவார்த்தைக்கு பின்னரும் பாக். விடாப்பிடியாக இருந்து வருகிறது. பூர்ணம் குமாரை மீட்க BSF பல முயற்சிகளை எடுத்து வருகிறது. பாக். தளபதி அளவிலான பேச்சுவார்த்தைக்கும் அழைப்பு விடுத்துள்ளது.