News May 15, 2024
நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி மோசடி (3)

இந்த மோசடி தொடர்பாக 2020இல் ராணா கபூர், தீரஜ் வதாவனை ED கைது செய்தது. தொடர்ந்து, 2022இல் சிபிஐ தீரஜை கைது செய்ய, அவர் சிறையிலேயே சொகுசாக வாழ்வதாகவும், உடல்நிலையை காரணம் காட்டி நாள் கணக்கில் மருத்துவமனையிலேயே தங்கி இருப்பதாகவும் பல குற்றச்சாட்டுகள் எழுந்தன. 2023ல் சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமின் பெற்று வெளியில் வந்த அவரை, உச்சநீதிமன்றம் சென்று மீண்டும் கைது செய்ய சிபிஐ அனுமதி பெற்றது.
Similar News
News December 5, 2025
பார்லிமென்ட்டை முடக்கிய தமிழக MP-க்கள்!

இன்று லோக்சபா தொடங்கியது முதலே <<18473828>>திமுக MP-க்கள்<<>> திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து பேச வேண்டுமென அமளியில் ஈடுபட்டனர். சபாநாயகர் பேசுவதற்கு அனுமதி மறுத்த நிலையில் கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து ‘நீதி வேண்டும்’ என தொடர்ந்து முழக்கமிட்ட நிலையில், மக்களவை ஒத்திவைக்கப்பட்டது. இதனிடையே, ராஜ்யசபாவிலும் அமளியில் ஈடுபட்ட திமுக மற்றும் கூட்டணி கட்சி MP-க்கள், வெளிநடப்பு செய்தனர்.
News December 5, 2025
ஜெயலலிதா நினைவிடத்தில் முடிவை அறிவித்தார் ஓபிஎஸ்

தனியாக கட்சி ஆரம்பிக்கும் எண்ணம் இல்லை என ஓபிஎஸ் தனது முடிவை அறிவித்துள்ளார். மெரினாவில் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு பேசிய அவர், செங்கோட்டையன் தவெகவில் இணைந்த பிறகு அவருடன் பேசவில்லை எனவும் தடாலடியாக கூறியுள்ளார். முன்னதாக வரும் 15-ம் தேதி தனிக்கட்சி குறித்த அறிவிப்பை OPS வெளியிட உள்ளதாக தகவல் வெளியானது கவனிக்கத்தக்கது.
News December 5, 2025
போர் அடிக்குது’னு ரீல்ஸ் பாக்குறீங்களா?

தொடர்ந்து ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருப்பதும் ஒருவித போதைக்கு அடிமையான நிலைதான் என மனநல நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். இதன் காரணமாக, Brain rot (மூளை அழுகல்) & கண் நோய்கள் அதிகரிக்கிறதாம். அதிகமாக ரீல்ஸ் பார்ப்பதால் குழந்தைகளுக்கு சுறுசுறுப்பு தன்மை குறைந்து, Dry eye syndrome பாதிப்பு அதிகரிக்கிறதாம். மேலும், பெரியவர்களுக்கு கவனச்சிதறல் ஏற்படுவதுடன் ஒற்றைத் தலைவலி, தூக்கமின்மை போன்றவை உண்டாகிறதாம்.


