News May 15, 2024
நாட்டிலேயே மிகப்பெரிய வங்கி மோசடி (2)

அதற்கு கைமாறாக யெஸ் வங்கி இணை நிறுவனர் ராணா கபூருக்கு ₹40 கோடி மதிப்பிலான நிலத்திற்கு ₹600 கோடி DHFL கடன் வழங்கியுள்ளது. அதேபோல், யெஸ் வங்கியிலிருந்து BRPL நிறுவனத்தின் பெயரில் ₹1,700 கோடி கடன் பெறும் திட்டத்தையும் DHFL முன்வைத்திருந்தது. இப்படி, போலி நிறுவனங்களின் பெயரிலும், தரமற்ற சொத்துக்களை அடமானம் வைத்தும் பல கோடி மோசடிகளை DHFL அரங்கேற்றி வந்தது சிபிஐ, ED விசாரணையில் தெரியவந்தது.
Similar News
News November 14, 2025
இன்றைய OTT விருந்து!

தியேட்டரில் வாரா வாரம் புது படங்கள் ரிலீசாவதை போலவே, OTT-யிலும் வாரா வாரம் புது படங்கள் வெளிவர தொடங்கி விட்டன. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, ஆங்கிலம் என பல மொழிப் படங்கள், இந்த வார OTT விருந்தாக இன்று வெளியாகியுள்ளன. அந்த படங்களின் லிஸ்ட்டை தெரிஞ்சிக்க மேலே உள்ள போட்டோக்களை வலது பக்கமாக Swipe செய்து பாருங்க. இதில், எந்த படத்தை பார்க்க நீங்க வெயிட்டிங்?
News November 14, 2025
100 இடங்களை தாண்டியது NDA

பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் NDA கூட்டணி தொடர்ந்து முன்னிலை பெற்று வருகிறது. தற்போதைய நிலவரப்படி BJP 56, JDU 44, LJP (RV) 3 என மொத்தம் 103 இடங்களில் NDA முன்னிலை பெற்றுள்ளது. அதேபோல், 60 தொகுதிகளுக்கு மேல் முன்னிலையில் இருந்த INDIA கூட்டணி, தற்போது 55 இடங்களாக குறைந்து பின்னடைவை சந்தித்துள்ளது. RJD 38, CONG 12, CPI (ML) 5 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளன.
News November 14, 2025
குழந்தைகளை பகுத்தறிவோடு வளர்ப்பேன்: CM ஸ்டாலின்

தாயன்பு காட்டி குழந்தைகளின் கனவுகளுக்கு துணை நிற்கும் திராவிடமாடல் அரசின் சார்பில் குழந்தைகள் தின வாழ்த்துகள் என CM ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். குழந்தைகளின் ஒவ்வொரு அடியிலும் அவர்களுடன் நிற்பேன் எனவும் அவர்கள் விழாமல் தாங்கிப் பிடித்துக் கொள்வேன் என்றும் தெரிவித்துள்ளார். மேலும், பரந்த பார்வையும் பகுத்தறிவும் கொண்ட குடிமக்களாய் அவர்களை வளர்த்தெடுப்பேன் எனவும் தெரிவித்தார்.


