News August 6, 2024
பிக்பாஸ் நிகழ்ச்சியை நடத்தப் போவதில்லை: கமல்

இந்தாண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப்போவதில்லை என்று கமல்ஹாசன் அறிவித்துள்ளார். சினிமாத்துறையில் ஏற்கெனவே ஒப்புக்கொண்ட படங்கள் அதிகமாக இருப்பதால் பிக்பாஸ் தொடரில் இருந்து சிறிய ஓய்வு எடுப்பதாக அவர் அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் நிறைய கற்றுக் கொண்டதாகவும் இந்த வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தவர்களுக்கு நன்றி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News April 6, 2026
BREAKING: தங்கம் விலை சவரனுக்கு ₹1,120 குறைந்தது

சென்னையில் தங்கம் விலை 3 நாள்களுக்கு பிறகு மீண்டும் சரிவைக் கண்டுள்ளது. 22 கேரட் தங்கம் கிராமுக்கு ₹140 குறைந்து ₹13,810-க்கும், சவரனுக்கு ₹1,120 குறைந்து ₹1,10,480-க்கும் விற்பனையாகிறது. அதேநேரம் தொடர்ந்து 5-வது நாளாக வெள்ளி விலையில் மாற்றமின்றி 1 கிராம் ₹255-க்கும், பார் வெள்ளி 1 கிலோ ₹2,55,000-க்கும் விற்பனையாகிறது. SHARE IT.
News April 6, 2026
விசில் ஊதினால் சளி சரியாகும்: செங்கோட்டையன்

குழந்தைக்கு சளி பிடித்திருந்தால் விசில் ஊதினால் போதும் சளி நின்றுவிடும் என செங்கோட்டையன் பேசியுள்ளார். திருச்செங்கோட்டில் பிரசாரம் மேற்கொண்ட அவர், மூச்சு பயிற்சி இதயத்துக்கு நல்லது என்பார்கள்; அதற்காக விசில் ஊதுங்கள் என்றார். மேலும், நாளை விசில் சின்னம் இந்தியாவையே ஆளப்போவதாகவும் அவர் பேசியுள்ளார். உங்கள் கருத்து? <<-se>>#TNElection2026<<>>
News April 6, 2026
மகளிர் வங்கியில் ₹50,000.. ராகுல் காந்தி வாக்குறுதி!

பிஹார் தேர்தலில் பாஜகவின் வியூகத்தை அசாமில் காங்., கையில் எடுத்துள்ளது. காங்., ஆட்சிக்கு வந்தால் பெண்கள் தொழில் தொடங்க தலா ₹50,000 வங்கிக் கணக்கில் வழங்கப்படும் என ராகுல் காந்தி உறுதியளித்துள்ளார். மேலும், அனைத்து குடும்பத்துக்கும் ₹25 லட்சம் மதிப்பில் சுகாதார காப்பீட்டையும் அவர் அறிவித்துள்ளார். பிஹாரில் ‘MHRY’ திட்டத்தின் கீழ் பெண்கள் சுய தொழில் தொடங்க ₹10,000 வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.


