News December 4, 2024
‘Bigg Boss தமிழ் ‘ அசோசியேட் டைரக்டர் தற்கொலை!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பிக் பாஸ் சீசன் 8’ நிகழ்ச்சியின் இணை இயக்குநர் ஸ்ரீதரன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த துறையில் எந்த முன்னேற்றமும் இல்லை என்றும், தனது முடிவுக்கு யாரும் காரணம் இல்லை எனவும் அவர் கடிதம் எழுதியுள்ளார். எந்த துறையாக இருந்தாலும் எடுத்ததுமே வெற்றி கிடைக்காது. மன உறுதியும், கடின உழைப்பும் இருந்தால் எந்த துறையிலும் கோலோச்சலாம். தற்கொலை எதற்கும் தீர்வல்ல.
Similar News
News December 7, 2025
தர்மம் மீண்டும் வெல்லும்: ராமதாஸ்

<<18492965>>PMK உள்கட்சி<<>> விவகாரத்தில் தலையிட EC-க்கு அதிகாரம் இல்லை என டெல்லி HC தெரிவித்தது. இந்நிலையில், 46 ஆண்டுகள் உழைத்து வளர்த்த பாமகவை, என்னிடம் இருந்து பறிக்க செய்த சதி முறியடிக்கப்பட்டுள்ளதாக ராமதாஸ் தெரிவித்துள்ளார். வரும் தேர்தலில் கட்சியின் அங்கீகாரத்தை மீட்பேன் என்று கூறியுள்ள அவர், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், தர்மம் மீண்டும் வெல்லும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
News December 7, 2025
பிரதமர் மோடி உருக்கமாக இரங்கல்

கோவாவின், அர்போரா பகுதியில் ஏற்பட்ட <<18492944>>தீ விபத்தில்<<>> 23 பேர் உயிரிழந்த நிலையில், ஜனாதிபதி திரெளபதி முர்மு மற்றும் PM மோடி உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்த விபத்து துயரத்தை அளிப்பதாகவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு துணை நிற்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். PM மோடி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ₹2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ₹50,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
News December 7, 2025
BREAKING: அறிவித்தார் செங்கோட்டையன்

தவெகவில் இணைந்தபிறகு கொங்கு மண்டலத்தில் கட்சியை வலுப்படுத்த செங்கோட்டையன் தீவிரமாக பணியாற்றுகிறார். இந்நிலையில், தனது சொந்த மாவட்டமான ஈரோட்டில் டிச.16-ம் தேதி நடைபெறவிருக்கும் பொதுக்கூட்டத்தில் விஜய் பங்கேற்க இருப்பதாக செங்கோட்டையன் அறிவித்துள்ளார். மேலும், அனுமதி கேட்டு கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்த உடனே பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்படும் என்றார்.


