News March 17, 2024
பெங்களூரு அணி அபார வெற்றி

டெல்லி கேபிட்டல்ஸ் அணிக்கு எதிரான WPL இறுதிப் போட்டியில், பெங்களூரு அணி வெற்றி பெற்றது. 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பெங்களூரு, தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்தது. கடைசி ஓவரில் இலக்கை அடைந்து, மகத்தான வெற்றியை பதிவு செய்தது. இந்தியாவில் நடைபெற்ற பிரீமியர் லீக் வரலாற்றில் முதல்முறையாக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி, பெங்களூரு அணி வரலாறு படைத்துள்ளது.
Similar News
News September 7, 2025
குறளிசைக் காவியம் படைத்த லிடியனுக்கு CM பாராட்டு

திருக்குறளை அனைவரும் உள்வாங்கும் வகையில் இசை வடிவில் லிடியன் நாதஸ்வரமும், அமிர்தவர்ஷினியும் இணைந்து வெளியிட்டுள்ளனர். இந்த அற்புதமான படைப்பை CM ஸ்டாலின் வெகுவாக பாராட்டியுள்ளார். பதின்பருவம் கடக்கின்ற இளம் வயதிலேயே, திருக்குறளை அனைவரும் உள்வாங்கிடும் வகையில் குறளிசைக் காவியம் படைத்த இருவரையும் வாழ்த்துவதாக ஸ்டாலின் X தளத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பாடலை நீங்கள் Spotify-ல் கேட்கலாம்…
News September 7, 2025
ராகுலை விமர்சித்த பாஜக நிர்வாகிக்கு ED சம்மன்

ராகுல் காந்தி UK குடியுரிமை பெற்றிருப்பதாக, கர்நாடகாவை சேர்ந்த பாஜக நிர்வாகி விக்னேஷ், அலகாபாத் ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்திருந்தார். இது தொடர்பான ஆவணங்களை வரும் 9-ம் தேதி நேரில் வந்து வழங்குமாறு விக்னேஷுக்கு ED சம்மன் அனுப்பியுள்ளது. முன்னதாக, வெளிநாட்டு குடியுரிமை பெற்ற ராகுல் இந்திய தேர்தல்களில் போட்டியிடுவதை தடை செய்ய வேண்டும் என விக்னேஷ் வலியுறுத்தி இருந்ததும் குறிப்பிடத்தக்கது.
News September 7, 2025
வரலாற்று சாதனை படைத்த இந்திய பெண் இயக்குநர்

82-வது வெனிஸ் திரைப்பட விருது விழாவில், இந்தியாவின் அனுபர்னா ராய் கௌரவமிக்க விருதைப் பெற்றுள்ளார். ‘Songs of Forgotten Trees’ படத்திற்காக Orizzonti பிரிவில் விருதை பெரும் முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார். நவீன கலை மற்றும் டிரெண்டை உருவாக்கும் முதல் பட இயக்குநருக்கு Orizzonti பிரிவில் இந்த சர்வதேச விருது வழங்கப்படும். இரு பெண்களுக்கு இடையிலான உறவுச் சிக்கலை இப்படம் பேசுகிறது.