News August 7, 2024

திமுக அமைச்சர்களுக்கு பெரும் பின்னடைவு

image

அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கை மீண்டும் விசாரிக்க, சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வழக்கில் குற்றச்சாட்டுகளை பதிவு செய்து, சாட்சி விசாரணையைத் தொடங்கவும், தினமும் விசாரணை நடத்தவும் ஸ்ரீவில்லிப்புத்தூர் சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டுள்ளது. இது, அமைச்சர்கள் இருவருக்கும் பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Similar News

News March 21, 2026

நடிகை கிரணை படுக்கைக்கு அழைத்த நண்பர்கள்.. கொடுமை

image

நண்பர்களே தன்னை படுக்கைக்கு அழைத்ததாக நடிகை கிரண் வேதனையுடன் தெரிவித்துள்ளார். கொரோனா காலத்தில் பண நெருக்கடி ஏற்பட்டதால் நண்பர்களிடம் உதவி கேட்டதாகவும், அதற்கு அவர்கள் தன்னை படுக்கைக்கு அழைத்தது மிகவும் வலியை கொடுத்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதன்பிறகே, பணம் சம்பாதிக்க கிளாமர் படங்களை அதிகளவில் SM-ல் பதிவிட ஆரம்பித்ததாகவும் கிரண் கூறியுள்ளார்.

News March 21, 2026

ஈரான் அதிபருடன் PM மோடி பேச்சுவார்த்தை

image

ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியனை தொலைபேசியில் தொடர்புகொண்டு PM மோடி ரம்ஜான் வாழ்த்துகளை தெரிவித்தார். அப்போது, மேற்கு ஆசிய பிராந்தியங்களில் உள்ள கட்டமைப்புகள் மீதான தாக்குதலை கண்டித்ததாகவும் PM மோடி X-ல் பதிவிட்டுள்ளார். மேலும் மசூத் பெசெஷ்கியனிடம் கப்பல் வழித்தடங்கள் (Strait of Hormus) திறந்து இருப்பதன் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்ததாகவும் அவர் கூறியுள்ளார்.

News March 21, 2026

அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவு

image

தேர்தல் நெருங்கும் சூழலில், அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைந்துள்ளது. விஸ்வகர்மா சமூக மக்கள் கட்சி பொ.செ., பாபுஜி சவாமிகள் & அக்கட்சியின் நிர்வாகிகள் EPS-ஐ நேரில் சந்தித்து, அதிமுக கூட்டணிக்கு முழு ஆதரவை தருவதாக தெரிவித்தனர். இலவச வீட்டு மனை, விஸ்வகர்மா சமூக நல வாரியம் உள்ளிட்ட 7 கோரிக்கைகளை நிறைவேற்றி தருவதாக EPS உறுதியளித்திருப்பதாகவும் பாபுஜி சுவாமிகள் கூறியுள்ளார்.

error: Content is protected !!