News April 6, 2025

CSKக்கு பெரும் பின்னடைவு

image

5 முறை சாம்பியனான CSK நடப்பு சீசனில் 3வது தோல்வியை நேற்று சந்தித்தது. இதனால் புள்ளிப்பட்டியலில் 9வது இடத்துக்கு CSK சென்றது. பேட்டிங்கில் தொடர்ந்து சொதப்பி வரும் சென்னை அணி எப்படி தொடர் தோல்வியில் இருந்து மீண்டு வரப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது. தோனி, ஜடேஜா, அஸ்வின் போன்ற மூத்த வீரர்களின் செயல்பாடு மோசமாக உள்ளது அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது.

Similar News

News April 11, 2025

EX லவ்வரை பழிவாங்கிய இளைஞர்.. 300 பார்சலா?

image

2k கிட்ஸ் அட்ராசிட்டிகளுக்கு அளவே இல்லாமல் போச்சு. மேற்கு வங்கத்தை சேர்ந்த சுமன் சிக்தர் என்பவர் தனது முன்னாள் காதலியை பழிவாங்க நூதன முறையை தேர்ந்தெடுத்துள்ளார். அமேசான், பிளிப்கார்ட் உள்ளிட்ட தளங்களில் இருந்து முன்னாள் காதலியின் முகவரிக்கு கேஷ் ஆன் டெலிவரியில் பொருட்களை ஆர்டர் செய்துள்ளார். 300க்கு மேற்பட்ட ஆடர்கள் வந்ததால் விரக்தி அடைந்து அப்பெண் புகார் அளிக்க. சுமன் கைது செய்யப்பட்டார்.

News April 11, 2025

வரலாற்றில் இன்று

image

➤2012 – இந்தோனேசியாவில் சுமத்ரா கடற்பகுதியில் 8.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. தமிழ்நாட்டிலும் சில இடங்களில் இலேசான நிலநடுக்கம் உணரப்பட்டது. ➤1829 – கொழும்பு, புறக்கோட்டை நூலகம் ஆரம்பிக்கப்பட்டது ➤1865 – ஆபிரகாம் லிங்கன் தனது கடைசி உரையை நிகழ்த்தினார். ➤1905 – ஐன்ஸ்டீன் தனது சார்புக் கோட்பாட்டை வெளியிட்டார். ➤1970 – அப்பல்லோ 13 விண்கலம் ஏவப்பட்டது.

News April 11, 2025

Fan boys சம்பவம்.. அடுத்து யாரு?

image

ஒரு ஹீரோவின் ரசிகன் படம் பார்க்க வரும் போது ஆயிரம் எதிர்பார்ப்புகளுடன் திரையரங்குக்கு வருவான். ஆனால் எல்லா நேரங்களிலும் ரசிகனின் எதிர்பார்ப்பை இயக்குநரால் நிறைவேற்ற முடியாது. ஆனால் ரசிகனே கனவு நாயகனை வைத்து படம் எடுத்தால் எப்படி இருக்கும். அதுதான் ரஜினி – கார்த்திக் சுப்பராஜ் – பேட்ட, கமல் – லோகேஷ் – விக்ரம் 2. அந்த வரிசையில் தரமான சம்பவம் செய்து இணைந்துள்ளார் ஆதிக். நீங்க GBU பாத்தாச்சா?

error: Content is protected !!