News September 17, 2025

குறையும் Big Screen தியேட்டர் மோகம்!

image

இருட்டு ரூமில், பலருடன் அமர்ந்து சிரித்து, அழுது, கைத்தட்டி- விசிலடித்து கொண்டாடி படம் பார்த்த உணர்வை மக்கள், வேண்டாம் என ஒதுக்க தொடங்கிவிட்டனர். பெரிய ஹீரோ, பெரிய பட்ஜெட் படம் என்றாலும், கொஞ்சம் சுமாராக இருந்தாலும், OTT பக்கம் ரசிகர்கள் சென்றுவிடுகின்றனர். இதற்கு டிக்கெட் விலை, படங்களின் தரம் என பல காரணங்களும் உள்ளது. நீங்க என்ன சொல்றீங்க.. ரசிகர்கள் தியேட்டர் அனுபவத்தை தவறவிடுகிறார்களா?

Similar News

News September 17, 2025

பாஜக கூட்டணியில் மாற்றங்கள் வருகிறது: நயினார்

image

புயலுக்கு பின் அமைதி போல தங்கள் கூட்டணி பிரச்னைகள் விரைவில் தீர்க்கப்படும் என NDA கூட்டணி சலசலப்பு குறித்து நயினார் நாகேந்திரன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பேரவை தேர்தலுக்கு இன்னும் 6 மாதங்கள் இருப்பதாகவும், கடைசி நிமிடங்களில் கூட கூட்டணியில் மாற்றங்கள் ஏற்படும் என்றும் விளக்கம் அளித்துள்ளார். மேலும், ADMK, PMK உள்கட்சி விவகாரங்கள் பாஜக தலையிடாது எனவும் கூறியுள்ளார்.

News September 17, 2025

போட்டோ ஷூட்டுக்கு பை பை சொன்ன AI

image

முதல்ல பிரீ வெட்டிங், போஸ்ட் வெட்டிங், பேபி போட்டோ ஷூட் அலப்பறைகள் சோஷியல் மீடியாவில் அதிகமாக இருந்தது. அந்த அலப்பறைகளுக்கு இப்போ AI முடிவுகட்டியுள்ளது. Costume, Background சொல்லி நம்ம போட்டோவா AI தொடர்பான APP-களில் அப்லோட் பண்ணா போதும். விதவிதமான போட்டோஸை AI அள்ளி கொடுத்துவிடும். அதன் சாம்பிள்தான் இன்ஸ்டாவில் கொட்டிக்கிடக்கும் GEMINI எடிட்டடு போட்டோஸ். இனிமே எதுக்கு போட்டோஷூட்?

News September 17, 2025

விரைவில் மா.செ., கூட்டம்: OPS

image

ஒருங்கிணைப்புக்கு வாய்ப்பே இல்லை என்று இபிஎஸ் திட்டவட்டமாக கூறிவிட்ட நிலையில், விரைவில் தனது அணி மாவட்டச் செயலாளர்கள், கட்சி மூத்த தலைவர்களின் கூட்டத்தை கூட்டவிருப்பதாக OPS தெரிவித்துள்ளார். தொண்டர்களின் விருப்பப்படி அக்கூட்டத்தில் எடுக்கப்படும் முடிவின் அடிப்படையில் அடுத்தக்கட்ட நடவடிக்கை இருக்கும் என்றார். மேலும், பாஜக தலைமை குறித்து நேற்று டிடிவி பேசிய கருத்தையும் அவர் வரவேற்றார்.

error: Content is protected !!