News August 25, 2024
ஓட்டுக்கு பணம் வாங்குவதுதான் பெரிய பிரச்னை: TTV

ஓட்டு போடுவதற்கு பணம் வாங்குவதுதான் பெரிய பிரச்னை என்று டிடிவி தினகரன் வேதனை தெரிவித்தார். இதுகுறித்து பேசிய அவர், “ஏழைகளின் வாக்குகளை கவர பல கட்சிகள் பணம் கொடுக்கின்றன. ஓட்டுக்கு பணம் கொடுத்தவன், பதவிக்கு வந்ததும் செலவிட்ட பணத்தை எடுக்க, மக்கள் வரிப்பணத்தை தான் கொள்ளையடிக்கிறான். இப்படி ஓட்டுக்கு பணம் வாங்குவதால் தான், லஞ்சத்தை உங்களால் தட்டிக் கேட்க முடியவில்லை.” எனக் கூறினார்.
Similar News
News December 3, 2025
வேலூர்: கணவன் அடித்தால் உடனே CALL!

நாளுக்கு நாள் குடும்பத்தில் பெண்களுக்கு நிகழும் வன்முறைகள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், அதனை தடுக்க அரசு சார்பாக பல்வேறு சேவைகள், நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. அது படி, வேலூர் மாவட்ட பெண்களுக்கு ஏதேனும் குடும்ப வன்முறை நேர்ந்தால், உடனே இந்த எண்ணுக்கு (181) அழைத்து புகார் அளிக்கலாம். இதை உடனே அனைவருக்கும் SHARE பண்ணுங்க!
News December 3, 2025
இந்த நாள்களை மறந்துடாதீங்க!

விஜய் ஹசாரே தொடரில் வரும் 24-ம் தேதி ஆந்திரா, 26-ம் தேதி குஜராத், ஜனவரி 6-ம் தேதி ரயில்வே ஆகிய அணிகளுக்கு எதிராக டெல்லி வீரராக கோலி களமிறங்குகிறார். கடைசியாக 2010-ம் ஆண்டு விஜய் ஹசாரே தொடரில் கோலி விளையாடி இருந்தார். முன்னதாக, 2027 ODI WC-ல் விளையாட உடற்தகுதி & ஃபார்மை தக்கவைத்து கொள்ள, உள்ளூர் போட்டிகளில் விளையாட வேண்டும் என அவருக்கு BCCI அறிவுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.
News December 3, 2025
டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ₹90.14 ஆக சரிவு

டாலருக்கு($) நிகரான ரூபாயின்(₹) மதிப்பு வரலாறு காணாத வகையில் ₹90.14 ஆக சரிந்துள்ளது. கடந்த ஜனவரியில் ₹86.45 ஆக இருந்த ₹ மதிப்பானது பல மாதங்களாக பெரிய அளவில் மாற்றமின்றி நீடித்தது. ஆனால், தற்போது USA வரி விதிப்பால் இந்திய ஏற்றுமதி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதால் பெரும் சரிவை கண்டுள்ளது. கச்சா எண்ணெய் உள்ளிட்ட இறக்குமதி பொருள்களுக்கான செலவு இந்தியாவில் பன்மடங்கு அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.


