News October 21, 2025
BIG NEWS: கனமழை.. CM ஸ்டாலின் உத்தரவு

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து செல்வதற்கு முன்னுரிமை கொடுக்கவும், நிவாரண முகாம்கள் அமைத்து குடிநீர், உணவு ஏற்பாடு செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். மழை பெய்தாலும் நெல் கொள்முதல் பணிகள் தொடர வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.
Similar News
News October 21, 2025
தீபாவளி: டாஸ்மாக் வசூலில் சாதனை.. இவ்வளவு கோடியா!

தீபாவளி விடுமுறை நாள்களில் ₹600 கோடிக்கு மது விற்பனை செய்ய டாஸ்மாக் நிர்வாகம் இலக்கு நிர்ணயித்திருந்தது. ஆனால், அதனை மிஞ்சும் வகையில் 3 நாள்களில் ₹789 கோடி வசூலாகியுள்ளது. அக்.18-ல் ₹230 கோடி, அக்.19-ல் ₹293 கோடி, அக்.20 தீபாவளி நாளில் ₹266 கோடிக்கு மது விற்பனை நடைபெற்றதாக டாஸ்மாக் தெரிவித்துள்ளது. இது கடந்த ஆண்டைவிட ஏறக்குறைய டபுள் மடங்கு அதிகம். 2024-ல் தீபாவளிக்கு ₹438 கோடிக்கு விற்பனையானது.
News October 21, 2025
₹5 கோடிக்கு கார் வாங்கும் ஊழல் எதிர்ப்பு அமைப்பு

ஊழலை ஒழிக்க கொண்டு வரப்பட்ட லோக்பால் அமைப்பு, 7 BMW சொகுசு கார்களை வாங்க டெண்டர் கோரியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த கார் ஒன்றின் விலை ₹70 லட்சமாகும். வெறும் காகிதத்தில் மட்டுமே உள்ள இந்த அமைப்பு, தற்போது வரி செலுத்துவோரின் பணத்தை அனுபவிக்கும் ஊழல் அதிகாரிகளால் நிரப்பப்பட்டுள்ளதாக காங்., சாடியுள்ளது. அதேபோல் SC வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன் உள்பட பலரும் இதை விமர்சித்து வருகின்றனர்.
News October 21, 2025
நாளை இங்கெல்லாம் பள்ளிகளுக்கு விடுமுறை

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. கடலூர், செங்கல்பட்டு, விழுப்புரம், மயிலாடுதுறை, தஞ்சை, கள்ளக்குறிச்சி, திருவாரூர், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் நாளை(அக்.22) பள்ளி, கல்லூரிகள் செயல்படாது. சென்னையில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரி, காரைக்காலிலும் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை லீவு விடப்பட்டுள்ளது.