News January 12, 2026
BIG NEWS: 3 எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து நீக்கம்

பாமக MLA-க்கள் 3 பேரை கட்சியிலிருந்து நீக்கி ராமதாஸ் அறிவித்துள்ளார். மயிலம் MLA சிவக்குமார், மேட்டூர் MLA சதாசிவம், தருமபுரி MLA வெங்கடேஸ்வரன் ஆகியோர் தொடர்ந்து கட்சி விரோத செயல்பாடுகளில் ஈடுபட்டு வருவதால் அவர்களை நீக்குவதாக ராமதாஸ் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். பாமகவுக்கு யார் தலைவர் என்பது ராமதாஸ் – அன்புமணி இடையே போட்டி நிலவும் நிலையில், இந்த நீக்கம் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
Similar News
News January 29, 2026
தேமுதிகவின் கூட்டணி உறுதியானதா?

தேமுதிகவின் கூட்டணி கணக்கு ஒருவழியாக சால்வ் ஆனதாக தகவல் கசிந்துள்ளது. முன்னதாக, தேமுதிக கேட்டதாக சொல்லப்படும் 17 தொகுதிகள் மற்றும் 1 ராஜ்யசபா சீட்டை அதிமுக கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் திமுக பக்கம் ரகசிய பேச்சுவார்த்தையை அக்கட்சி தொடங்க, 6 தொகுதிகள் + 1 ராஜ்யசபா சீட் என்ற முடிவுடன் கூட்டணி உறுதியாகி இருக்கிறதாம். இதுபற்றி பிரேமலதா விரைவில் அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
News January 29, 2026
தேசிய செய்தித்தாள் தினம் இன்று!

இன்று தேசிய செய்தித்தாள் தினம். 1780-ம் ஆண்டு இதே நாளில், நாட்டில் முதல்முறையாக ‘ஹிக்கிஸ் பெங்கால் கெசட்’ செய்தித்தாள் அச்சிடப்பட்டது. சுதந்திர போராட்டத்தில் செய்தித்தாள்கள் ஆற்றிய பங்கை நினைவு கூறும் விதமாக, இந்த தினம் கொண்டாடப்படுகிறது. அன்று செய்தித்தாளாக இருந்தவை இன்று, Short News App-களாக மாறியுள்ளன. காலங்கள் ஓட, வடிவங்கள் மட்டுமே மாறியுள்ளன, வீரியம் எப்போதும் ஒன்றே!
News January 29, 2026
கூட்டணி பற்றி விஜய் மட்டுமே அறிவிப்பார்: CTR

தவெகவுடன் கூட்டணி வைத்தால் காங்.,க்கு மீண்டும் பவர் கிடைக்கும் என விஜய்யின் தந்தை <<18982071>>SAC<<>> கூறியிருந்தார். இதையடுத்து எங்களுக்கு யாரும் பூஸ்ட் தரத் தேவையில்லை என செல்வப்பெருந்தகை பதிலளித்திருந்தார். இந்நிலையில், SAC-ன் அழைப்பு என்பது மக்களின் பொதுவான கருத்து என CTR நிர்மல் குமார் தெரிவித்துள்ளார். அத்துடன், கூட்டணி குறித்து உரிய நேரத்தில் விஜய் அறிவிப்பார் என்றும் அவர் கூறியுள்ளார்.


