News February 12, 2026

BIG NEWS: திருப்பத்தூரில் தினம் தினம் அரங்கேறும் கொடூரம்!

image

வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி போன்ற மாவட்டங்களில் எருது விடும் விழா பிரபலம். எருதை வேகமாக ஓட வைக்க வேண்டும் என மனித தன்மையை இழந்து, எருதின் ஆசன வாயு பகுதி மற்றும் வால் பகுதியில் கிளிப் மாட்டி கொடுமை படுத்தும் அவலம் தினம் தினம் அரங்கேறி வருகிறது. ஒருபடி மேலே போய் இது போன்ற விழாவை துவக்கிவைக்கும் MLA-க்கள் கண்முன்னே எருதுகள் இவ்வாறு ஓடுகிறது. ஆனால் ஒரு MLAகூட இதற்கு எதிராக மூச்சுகூட விடவில்லை.

Similar News

News February 14, 2026

இபிஎஸை கடுமையாக சாடிய முதல்வர்

image

திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழு கூட்டத்தில் பேசிய முதல்வர், “ பொல்லாத பழனிச்சாமியின் ஆட்சிக்கு சாட்சியாக பொள்ளாச்சி சம்பவம் உள்ளது” என இபிஎஸை விமர்சித்தார். மேலும் ”ஒரு அரசியல்வாதி எப்படி இருக்கக்கூடாது என்பதற்கு உதாரணம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி. தூத்துக்குடி ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு சம்பவத்தை தொலைக்காட்சியில் பார்த்து தெரிந்துகொண்டதாக சொன்னவர் எடப்பாடி பழனிசாமி” என்றார்.

News February 14, 2026

பாஜகவின் கிளை செயலாளர் இபிஎஸ்: முதல்வர்

image

திருப்பத்தூர் மாவட்டம் மண்டலவாடியில் திமுக-வின் வடக்கு மண்டல வாக்குச்சாவடி குழுவினருக்கான கூட்டம் நடைபெற்று வருகிறது. இதில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் ”பாஜகவின் கிளை செயலாளராக எடப்பாடி பழனிசாமி செயல்பட்டு வருகிறார்” என விமர்சனம் செய்துள்ளார். மேலும், பாஜவின் கிளை தான் அதிமுக எனவும், கிளை செயலாளர் தான் எடப்பாடி பழனிசாமி எனவும் குறிப்பிட்டுள்ளார்.

News February 14, 2026

BREAKING: வாணியம்பாடி முன்னாள் எம்.எல்.ஏ திமுகவில் இணைவு

image

திருப்பத்தூர்: மண்டலவாடி பகுதியில் தற்போது நடைபெற்று வரும் திமுக வடக்கு மண்டல வாக்குச்சாவடிக்குழு பயிற்சி மாநாட்டில், அதிமுக மு. அமைச்சரும், வாணியம்பாடி எம்.எல்.ஏ-வுமான நீலோபர் கபீல் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார். கடந்த 2016ஆண்டு அதிமுக ஆட்சியில் அமைச்சராக இருந்த இவர், இன்று அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தலைமை அலுவலகத்திற்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

error: Content is protected !!