News February 11, 2026
BIG NEWS: தமிழக தேர்தல் தேதி.. புதிய அப்டேட் வந்தது

TN உள்ளிட்ட 5 மாநிலங்களில் பிப்.28 வரை SIR பணிகள் நடைபெறவுள்ளது. அதனால் மார்ச் முதல் வாரம் வரை தேர்தல் அறிவிப்பு வெளியாகாது. இதனிடையே, ஏப்ரல் 3-வது வாரத்தில் வியாழன்(ஏப்.16) வெள்ளி(ஏப்.17), (அ) திங்கள்கிழமை(ஏப்.20) தேர்தலை வைத்தால் தொடர்ந்து 3 நாள்கள் விடுமுறை வரும். மக்கள் மகிழ்ச்சியோடு சொந்த ஊர்களுக்கு சென்று வாக்களிப்பார்கள் எனவும் வாக்குப்பதிவு சதவீதம் உயரும் என்றும் ECI ஆலோசித்து வருகிறதாம்.
Similar News
News February 16, 2026
CINEMA 360°: ஹீரோயினான குஷ்பு மகள்!

மலையாளத்தில் உருவாகும் ‘ஆரம்பம்’ என்ற படத்தின் மூலம் சுந்தர்.சி – குஷ்பூவின் மகள் அவந்திகா சினிமாவில் அறிமுகமாகவுள்ளார் *SK 26 கடவுள் முருகரை பற்றிய கதையாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது * அஜித் – ஆதிக் ரவிச்சந்திரனின் படத்தின் அப்டேட் வரும் 22-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது * பிரதீப் ரங்கநாதனின் LIK படம் மார்ச் 19-ம் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News February 16, 2026
மொபைல் ஸ்பீக்கரில் தண்ணீர் போய்டுச்சா?

கூகுளில் Mobile Speaker Water Ejector என தேடி, Fix My Speakers என்ற டேப்-ஐ ஓப்பன் செய்யுங்கள். அதில் Blower-ஐ கிளிக் செய்தால் சவுண்ட் கேட்கும். அந்த சத்தம் அடங்கும் வரை காத்திருந்தால், உங்கள் மொபைல் ஸ்பீக்கர் சரியாகிவிடும். 5 நிமிடங்களை கடந்து சத்தம் கேட்டுக்கொண்டே இருந்தால், வெளியில் வந்துவிட்டு சவுண்ட் செக் செய்யுங்கள். இந்த சவுண்டானது நீரை வெளியேற்றத் தேவையான அழுத்தத்தில் இருக்கும்.
News February 16, 2026
மருமகளுக்கு எதிராக மகளை களமிறக்க ராமதாஸ் திட்டம்!

அன்புமணி களமிறக்கும் வேட்பாளர்களை எதிர்த்து தனது வேட்பாளர்களை களமிறக்க ஏற்கெனவே ராமதாஸ் திட்டமிடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், வரும் தேர்தலில் சௌமியா அன்புமணி தருமபுரி (அ) பாப்பிரெட்டிப்பட்டியில் போட்டியிடவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. இதனால், போட்டியிடும் தொகுதியை சௌமியா அறிவித்த பிறகு அதே தொகுதியில் தனது மகளான ஸ்ரீகாந்தியை களமிறக்க ராமதாஸ் ஆலோசனை நடந்தி வருவதாக கூறப்படுகிறது.


