News February 1, 2026
BIG NEWS: தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

சர்வதேச சந்தையில் தங்கம் விலை 3 நாள்களில் தலைகீழாக குறைந்துள்ளது. கடந்த ஜன.30-ல் 1 அவுன்ஸ் $5,500 ஆக இருந்த தங்கம் இன்று $4,893 ஆக உள்ளது. $607 (₹55,651) குறைந்ததன் விளைவாகவே இந்திய சந்தையில் தங்கம் விலை மளமளவென குறைந்தது. டாலரின் மதிப்பு உயர்ந்து வருவதால் முதலீட்டாளர்களின் கவனம் தங்கத்தின் மீதிருந்து டாலர் பக்கம் திரும்பியுள்ளதால் வரும் நாள்களிலும் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாம்.
Similar News
News February 20, 2026
தங்கம் விலை ₹5,000 குறைகிறது.. இனிப்பான செய்தி

தங்கம் விலை இன்று சவரனுக்கு ₹640 குறைந்துள்ளது. இந்நிலையில், அடுத்த 2 மாதங்களில் சவரனுக்கு ₹3,000 – ₹5,000 குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதங்களை உயர்த்தினாலோ (அ) போர் பதற்றங்கள் தணிந்தாலோ இவ்வாறு குறையும் எனக் கூறப்படுகிறது. அதேபோல், ஜூலை – செப்., இடையே சர்வதேச அளவில் தங்கம் விற்பனை அதிகரித்தாலும், விலை சரியும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
News February 20, 2026
ஜெ., ஆசியுடன் ஸ்டாலின் CM ஆவார்: OPS ஆதரவு MLA

தேர்தலில் ஸ்டாலினே மீண்டும் வென்று CM ஆக வரவேண்டும் என OPS ஆதரவாளரும், உசிலம்பட்டி MLA-வுமான ஐயப்பன் சட்டப்பேரவையில் பேசியுள்ளார். CM ₹5,000 கொடுத்ததற்காக கூப்பாடு போட்டவர்கள் யாரும் இன்று அவைக்கே வரவில்லை என்றும், காலை உணவு திட்டத்தை தமிழ் சமுதாயம் இருக்கும் வரை பாராட்டும் எனவும் கூறினார். MGR, ஜெயலலிதாவின் ஆசியுடன், OPS வாழ்த்துகளுடன் திமுக அரசே தொடரும் எனவும் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
News February 20, 2026
மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் உயர்கிறது..

8-வது ஊதியக் குழு பரிந்துரையின் அடிப்படையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அறிவிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அகவிலைப்படி 60% ஆக உயர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. குறிப்பாக, Fitment Factor 2.57 (அ) அதற்கு அருகிலிருந்தால் 30% – 34% வரை சம்பள உயர்வு கிடைக்கும் என்றும் தகவல்கள் கூறுகின்றன. உதாரணமாக, ₹18,000 சம்பளத்திற்கு Fitment Factor 2.57 ஆக இருந்தால், ₹46,260 ஆக உயரக்கூடும்.


