News January 24, 2026
BIG NEWS: ஓபிஎஸ் உடன் திமுக அமைச்சர்.. புதிய பரபரப்பு

பேரவை முடிந்த கையோடு, சபாநாயகர் அறையில் OPS-ஐ அமைச்சர் <<18942850>>சேகர் பாபு<<>> சந்தித்து 15 நிமிடங்கள் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில், இது மரியாதை நிமித்தமான சந்திப்புதான், அரசியல் ஏதும் பேசவில்லை என சேகர் பாபு விளக்கம் அளித்துள்ளார். OPS-ன் ஆதரவாளர்கள் ஒவ்வொருவராக மாற்றுக் கட்சிகளில் இணைவதால் அவர் என்ன முடிவெடுக்க போகிறார் என அரசியல் களத்தில் கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News February 11, 2026
ராமதாஸ் பெயரில் புதிய கட்சி

பாமகவும், மாம்பழமும் அன்புமணி கட்டுப்பாட்டில் இருக்கிறது, கூட்டணியும் கைகூடவில்லை என்பதால் ராமதாஸ் தரப்பு அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது. இந்நிலையில், ராமதாஸ் தரப்பில் உள்ள அன்பழகனின் மகன் முகிலன் தலைமையில் “அய்யா பாட்டாளி மக்கள் கட்சி” என்ற புதிய கட்சி உருவாகியுள்ளதாம். தேர்தலில் அன்புமணி நிறுத்தும் வேட்பாளர்களுக்கு எதிராக வேட்பாளர்களை இறக்குவதே கட்சியின் இலக்கு என்கின்றனர்.
News February 11, 2026
தேசிய பாடல் பாடும்போது.. இனி இதான் புதிய ரூல்ஸ்

வந்தே மாதரம் & ஜன கண மன குறித்து மத்திய அரசு புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. அதன்படி, அரசு விழாக்கள், ஜனாதிபதி/கவர்னர் உரைகளின் போது வந்தே மாதரத்தை முழுமையாக (3.10 நிமிடங்கள்) பாட வேண்டும். ஒரே நிகழ்ச்சியில் வந்தே மாதரம் & தேசிய கீதம் இசைக்கப்பட்டால், முதலில் வந்தே மாதரம் பாடப்பட வேண்டும். அது ஒலிக்கும்போது நிற்க வேண்டும். திரைப்படத்தின் நடுவில் வந்தே மாதரம் வந்தால், நிற்க வேண்டிய அவசியமில்லை.
News February 11, 2026
Cab-ல் தனியாக செல்லும் பெண்களே.. NOTE THIS

பெண்களே, Cab-ல் பயணிக்கும்போது பாதுகாப்பு தொடர்பான பிரச்னைகள் வந்தால் பதற்றமடைய வேண்டாம். 112 என்ற நம்பருக்கு டயல் செய்தால் போதும். 10 நிமிடங்களில் லொகேஷனை டிராக் செய்து நீங்கள் இருக்கும் பகுதிக்கு போலீஸ் வந்துவிடும். ‘112 India APP’ செயலியையும் போனில் பதிவிறக்கம் செய்துகொள்ளுங்கள். எப்போது பிரச்னை வந்தாலும், இது உங்களுக்கு கைகொடுக்கும். நீங்கள் அக்கறை கொண்டுள்ள பெண்களுக்கு இத SHARE பண்ணுங்க.


