News October 19, 2025

தங்கம் விலையில் வரும் பெரிய மாற்றம்

image

சில நாட்களில் தங்கம் விலை ஒரு லட்சத்தை எட்டிவிடும் என்று பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். இதுவரை தங்கத்தில் முதலீடு செய்யாமல், புதிதாக செய்தால் பாதிப்பை சந்திக்க நேரிடும் என எச்சரிக்கின்றனர். எனவே, புதிதாக தங்கத்தில் முதலீடு செய்வோர் கொஞ்சம் காத்திருக்கலாம். சர்வதேச பொருளாதார நிலையை பொறுத்து முடிவு செய்யுங்கள்; 2013ல் ஒரே நாளில் (28%) தங்கம் விலை குறைந்ததுபோல் நல்ல விஷயம் நடக்கலாம் என்கின்றனர்.

Similar News

News October 19, 2025

நீலகிரி: இனி லைன்மேனை தேடி அலைய வேண்டாம்!

image

நீலகிரி மக்களே, உங்கள் வீடு அல்லது தெருவில் திடீரென மின்தடை ஏற்பட்டால், இனி லைன்மேனைத் தேடி அலைய வேண்டிய அவசியமில்லை. தற்போது, பொதுமக்கள் TNEB Customer Care எண்ணான 94987 94987-ஐ தொடர்புகொண்டு, உங்கள் மின் இணைப்பு எண் (Service Number) மற்றும் இருப்பிடம் உள்ளிட்ட தகவல்களை வழங்கினால் போதும், அடுத்த 5 நிமிடங்களில் லைன் மேன் உங்கள் வீடு தேடி வருவார். இந்த தகவலை மற்றவர்களுக்கும் SHARE பண்ணுங்க!

News October 19, 2025

விஜய்யுடன் கூட்டணி வைத்தாலும் EPS தான் CM

image

தவெகவுடன் அதிமுக கூட்டணி அமைத்தாலும் இபிஎஸ் தான் முதல்வர் என நடிகையும், அதிமுக கொள்கை பரப்பு துணை செயலாளருமான கௌதமி தெரிவித்துள்ளார். கரூரில் நடந்த கொடூரமான சம்பவத்தை பற்றி பேச விரும்பவில்லை. அதற்கான சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பாதிக்கப்பட்ட மக்களை விஜய் கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என வலியுறுத்தினார்.

News October 19, 2025

சோகத்தில் ஆழ்த்திய Ro- Ko!

image

ஆஸி., எதிரான முதல் ODI-ல் இந்திய அணி 21/2 என தள்ளாடி வருகிறது. ரோஹித் 8 ரன்களிலும், கோலி ரன் இன்றியும் அவுட்டானது ரசிகர்களை பெரிய சோகத்தில் ஆழ்த்தியது. 7 மாதங்களுக்கு பிறகு களமிறங்கும் Ro- Ko பெரிதாக சாதிப்பார்கள் என எதிர்பார்த்த நிலையில், அனைத்தும் சொதப்பி விட்டது. கில் 9* ரன்னிலும், ஷ்ரேயஸ் ஐயர் 2* ரன்னிலும் களத்தில் உள்ளனர். மீளுமா இந்தியா?

error: Content is protected !!