News March 30, 2024

BIG BREAKING: அதிமுகவில் இணைந்தார் தடா பெரியசாமி

image

பாஜக மாநில பட்டியல் அணி தலைவர் தடா பெரியசாமி அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட அவர் விருப்பம் தெரிவித்தார். ஆனால், அவருக்கு பாஜக சீட் கொடுக்கவில்லை. இதனால், அதிருப்தியடைந்த அவர், இபிஎஸ் முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். பட்டியலின மக்கள் மத்தியில் செல்வாக்குமிக்க அவர் விலகியது பாஜகவுக்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

Similar News

News January 7, 2026

மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி!

image

தனக்கு எதிராக பேச ஜாய் கிரிசில்டாவுக்கு தடை விதிக்க கோரிய மாதம்பட்டி ரங்கராஜ் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பாக சென்னை HC-ல் நடந்துவரும் வழக்கில், ரங்கராஜின் கோடிக்கணக்கான வியாபாரத்தை பாதிக்கும் வகையில் அவரை பற்றி அவதூறு பரப்பி யூடியூபில் பணம் சம்பாதிப்பதாக வாதிடப்பட்டது. அதற்கு கிரிசில்டா தரப்பு, மகளிர் ஆணையம் உத்தரவிட்டும் ரங்கராஜ் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை என வாதிட்டது.

News January 7, 2026

₹1,020 கோடி ஊழல் புகார்.. KN நேரு மீது FIR பதிய மனு

image

அமைச்சர் KN நேரு மீதான ₹1,020 கோடி புகாரில் FIR பதிவு செய்யக்கோரி HC-ல் அதிமுக வழக்கு தொடர்ந்துள்ளது. MP இன்பதுரை தாக்கல் செய்த மனுவில், நகராட்சி நிர்வாகத் துறையில் நியமனம் மற்றும் ஒப்பந்த விநியோகங்களில் கோடிக்கணக்கில் முறைகேடு நடந்துள்ளது என்றும், ED அளித்த ஆதாரங்களுடன் புகாரளித்தும் லஞ்ச ஒழிப்புத்துறையும், காவல்துறையும் நேரு மீது வழக்குப்பதிய மறுக்கின்றன என்றும் குறிப்பிட்டுள்ளார்.

News January 7, 2026

விஜய் ஒரு அரசியல் சக்தி: பிரவீன் சக்ரவர்த்தி

image

தமிழகத்தில் விஜய் அரசியல் சக்தியாக உருவெடுத்துவிட்டார் என்று காங்.,ன் <<18785527>>பிரவீன் சக்ரவர்த்தி<<>> கூறியுள்ளார். விஜய்யை நடிகராக பார்க்க யாரும் வரவில்லை, அரசியல் தலைவராக பார்க்கத்தான் வருகின்றனர் என்றும் அவர் தெரிவித்துள்ளார். ஆட்சியில் பங்கு, அதிக சீட் என்பது காங்., தொண்டர்களின் கோரிக்கை என்றும் கூறியுள்ளார். இந்த பேச்சு திமுக – காங்., கூட்டணியில் மேலும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

error: Content is protected !!