News April 2, 2024

BIG BREAKING: உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

image

தமிழகத்தில் மணல் கொள்ளை வழக்கில் ED முன்பு ஏப்.25ஆம் தேதி மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தேர்தல் நடவடிக்கைகள் பாதிக்கும் என்பதால் ஆட்சியர்கள் ஆஜராக அவகாசம் வழங்க வேண்டும் என தமிழக அரசு கோரிக்கை விடுத்தது. இந்த கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம், ஆட்சியர்கள் கட்டாயம் ஆஜராக வேண்டும். இல்லையென்றால் கடும் நடவடிக்கை பாயும் என எச்சரித்துள்ளது.

Similar News

News December 29, 2025

விஜய்யை விசாரிக்க சிபிஐ திட்டம்?

image

கரூர் கூட்ட நெரிசல் தொடர்பாக தவெக பொ.செ., புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா உள்ளிட்ட தவெக நிர்வாகிகளுக்கு சிபிஐ சம்மன் அனுப்பியிருந்தது. அவர்கள் இன்று டெல்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜராகி அதிகாரிகளின் கேள்விகளுக்கு பதிலளிக்கவுள்ளனர். இதனிடையே, விஜய்யிடம் விசாரணை நடத்த திட்டமிட்டு அதற்கான கேள்விகளை CBI இறுதி செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. எனவே, விரைவில் விஜய்க்கு சம்மன் அளிக்கப்பட வாய்ப்புள்ளது.

News December 29, 2025

2025-ல் கிங் கோலி படைத்த சாதனைகள்!

image

இந்திய நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி வழக்கம் போல, இந்த ஆண்டும் பல ரெக்கார்டுகளை படைத்துள்ளார் ✦அதிவேகமாக 14,000 ODI ரன்களை கடந்த வீரர் ✦ICC Knock-out போட்டிகளில் 1,000 ரன்களை விளாசிய ஒரே வீரர் ✦சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு பார்மட்டில் அதிக சதம் அடித்த வீரர் (ODI-ல் 52 சதங்கள்) போன்ற பல சாதனைகளை அவர் நிகழ்த்தியுள்ளார். இதற்காக RCB ஸ்பெஷல் போஸ்டர் ஒன்றையும் வெளியிட்டுள்ளது.

News December 29, 2025

அரசியலில் நுழையாமலே த(ல)லை காட்டும் அஜித்குமார்

image

விஜய் அரசியலுக்கு வந்ததில் இருந்தே, சினிமாவில் அவருக்கு போட்டியாக பார்க்கப்படும் அஜித்குமார் அரசியல் களத்தில் அவ்வப்போது த(ல)லை காட்டுகிறார். நேற்று EPS பரப்புரையின்போது அஜித் & EPS இருக்கும் போட்டோவை தொண்டர்கள் அவரிடம் வழங்கினர். முன்னதாக கூட்டத்தில் தவெக கொடி இருந்ததை, ‘பிள்ளையார் சுழி’ என EPS குறிப்பிட்டார். அதேபோல், திமுக அரசும் விளையாட்டு துறை லோகோ அஜித்தின் ரேஸிங் அணியில் இடம்பெற செய்தது.

error: Content is protected !!