News April 7, 2025

BIG BREAKING: பெட்ரோல், டீசல் மீதான வரி உயர்வு?

image

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை ₹2 உயர்த்தி மத்திய அரசு அறிவித்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் வரலாறு காணாத சரிவை சந்தித்து வருகிறது. இதனால், எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை குறைக்கும் என்று எதிர்பார்த்திருந்த நுகர்வோருக்கு ஏமாற்றமே மிஞ்சியது. ஆனாலும், பொதுமக்களுக்கு விலையை உயர்த்தக் கூடாது என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அரசு உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Similar News

News April 12, 2025

தினம் ஒரு திருக்குறள்

image

▶குறள் பால்: அறத்துப்பால் ▶குறள் இயல்: துறவறவியல் ▶அதிகாரம்: வெகுளாமை.
▶குறள் எண்: 304 ▶குறள்:
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின்
பகையும் உளவோ பிற.
▶பொருள்: சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.

News April 12, 2025

இந்தியா வரும் அமெரிக்க துணை அதிபர்

image

USA துணை அதிபர் ஜேடி வான்ஸ் மற்றும் அவரது மனைவி உஷா, 4 நாள்கள் பயணமாக வரும் 21-ம் தேதி இந்தியா வர உள்ளனர். பிரதமர் மோடியை சந்திக்க உள்ளனர். இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கு இடையே வர்த்தகம், பாதுகாப்பு தொடர்பாக முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்பின் வர்த்தக போருக்கு நடுவே, USA துணை அதிபரின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

News April 12, 2025

CSK அணியின் மோசமான ரெக்கார்ட்

image

சென்னை சேப்பாக்கத்தில் குறைந்த ரன்களை அடித்த 2ஆவது அணியாக CSK உருவெடுத்துள்ளது. KKR-க்கு எதிரான நேற்றைய போட்டியில் 103 ரன்களை எடுத்ததன் மூலம் இந்த ரெக்கார்டை படைத்துள்ளது. 2019-ல் 70 ரன்களுக்குள் சுருண்டு இந்த பட்டியலில் RCB முதலிடத்தில் உள்ளது. அதேபோல், CSK-வின் 3ஆவது குறைந்தபட்ச ஸ்கோராக 103 உள்ளது. 2013ல் 79 ரன்களில் சுருண்டதுதான் அந்த அணியின் மிகவும் குறைந்தபட்ச ஸ்கோராகும்.

error: Content is protected !!