News March 16, 2024

BIG BREAKING: அதிமுகவில் இருந்து விலகினார்

image

அதிமுகவில் இருந்து விலகி முன்னாள் எம்.பி., விஜயகுமார் பாஜகவில் இணைந்துள்ளார். குமரி மாவட்டச் செயலாளர் பொறுப்பையும், மாநிலங்களவை எம்.பி. பதவியையும் ஒருங்கே கொடுத்தார் ஜெயலலிதா. ஜெ., மறைவுக்கு பிறகு EPS- OPS என அணிகள் பிரிந்தபோது, இவர் இபிஎஸ் அணியில் இருந்தவர். அவரைத் தொடர்ந்து, அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் தலைவர் மூக்கையா தேவரின் மகன் முத்துராமலிங்கமும் பாஜகவில் இணைந்தார்.

Similar News

News January 14, 2026

பொங்கல் பணம்.. இன்றே கடைசி நாள்

image

பச்சரிசி, சர்க்கரை, கரும்பு, வேஷ்டி, சேலை, ₹3,000 ரொக்கம் ஆகியவற்றை உள்ளடக்கிய பொங்கல் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. நாளை முதல் பொங்கல் விடுமுறை தொடங்கவுள்ளதால், இன்றே பொங்கல் பரிசை பெற கடைசி நாளாகும். எனவே, பொங்கல் பரிசு வாங்காதவர்கள் உடனே ரேஷன் கடைக்கு சென்று பெற்றுக்கொள்ளுமாறு அரசு அறிவுறுத்தியுள்ளது. பொங்கலுக்கு பிறகும் தொகுப்பு வழங்கப்படுமா என்பது குறித்த தகவல்கள் வெளியாகவில்லை.

News January 14, 2026

வா வாத்தியார்- எம்ஜிஆரா? நம்பியாரா? Review & Rating

image

✦தாத்தா ராஜ்கிரணால் எம்ஜிஆராக வளர்க்கப்படும் கார்த்தி, நம்பியாராக மாறி, மீண்டும் எப்படி எம்ஜிஆராகிறார் என்பதே ‘வா வாத்தியார்’ ✦பிளஸ்: கார்த்தி ஒன் மேன் ஷோ இந்த படம். பட்டையை கிளப்பியுள்ளார். ராஜ்கிரண் உள்பட மற்ற நடிகர்கள் கச்சிதம். இயக்குநர் நலனின் ஒன்லைன் காமெடியும், திரைக்கதையும் ரசிக்க வைக்கிறது. கேமரா, இசை அற்புதம் ✦பல்ப்ஸ்: 2-ம் பாதியின் சில இடங்களில் சுவாரஸ்யம் குறைகிறது. Rating: 2.5/5.

News January 14, 2026

சற்றுமுன்: 38 பேர் பலி.. பெரும் துயரம்

image

ஆப்பிரிக்காவின் மாலி நாட்டில் கடலில் படகு கவிழ்ந்து 38 பேர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வடக்கு மாலியில் உள்ள நைஜர் நதி நகரத்தில் இருந்து, இரவு நெல் அறுவடை செய்த தொழிலாளர்களையும், விவசாயிகளையும் ஏற்றிக் கொண்டு சென்ற படகு பாறையில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் 38 பேர் நீரில் மூழ்கி உயிரிழந்த நிலையில், அவர்களின் உடல்களை பார்த்து, உறவினர்கள் கதறி துடிக்கும் காட்சி நெஞ்சை உலுக்குகிறது.

error: Content is protected !!