News September 29, 2025

Asia Cup: ஆசிய கோப்பையை வென்றது இந்தியா

image

ஆசிய கோப்பை 2025-ஐ சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி வென்றுள்ளது. பாக்.,ஐ 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை இந்தியா கைப்பற்றியுள்ளது. முதலில் பேட்டிங் செய்த பாக்., அணி, இந்தியாவின் அபார பந்துவீச்சால் 146 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. 147 ரன்களை சேஸிங் செய்த இந்தியா, 150 ரன்களை எடுத்து அபார வெற்றி பெற்றுள்ளது. 69 ரன்கள் குவித்து திலக் வர்மா வெற்றிக்கு வழிவகுத்தார்.

Similar News

News September 29, 2025

மரணத்துக்கு முன்… திடுக்கிடும் உண்மை

image

மரணம் சம்பவிக்கும் முன் மூளையில் என்ன நடக்கிறது என்ற மனித குலத்தின் நீண்டகால புதிருக்கு விடைக் கொடுத்துள்ளது லூயிஸ்வில்லி யுனிவர்சிடியின் லேட்டஸ்ட் ஆய்வு. மரணத்துக்கு முன், நம் மூளை அதிவேகமாக வாழ்க்கையின் முக்கிய நினைவுகளை மீட்டெடுத்து, மனக்கண் முன் நிறுத்துவதை கண்டறிந்துள்ளனர். இது, மரணத்துக்கு அப்பால் என்ன என்பதை பற்றி புதிய தேடலுக்கு வழிவகுத்துள்ளது. எனில், மூளைச்சாவுடன் வாழ்வு முடிந்துவிடாதா?

News September 29, 2025

இன்றைய நல்ல நேரம்

image

▶செப்டம்பர் 29, புரட்டாசி 13 ▶கிழமை: திங்கள் ▶நல்ல நேரம்: 6:15 AM – 7:15 AM & 4:45 PM – 5:45 PM ▶கெளரி நல்ல நேரம்: 9:15 AM – 10:15 AM & 7:30 PM – 8:30 PM ▶ராகு காலம்: 7:30 AM – 9:00 AM ▶எமகண்டம்: 10:30 AM – 12:00 PM ▶குளிகை: 1:30 PM – 3:00 PM ▶திதி: அதிதி ▶சூலம்: கிழக்கு ▶பரிகாரம்: தயிர் ▶பிறை: வளர்பிறை

News September 29, 2025

ஆசிய கோப்பையில் இந்தியாவின் ஆதிக்கம்: முர்மு

image

9-வது முறையாக ஆசிய கோப்பையை வென்று இந்தியா அணி அபார சாதனை படைத்துள்ளது. இந்நிலையில், இந்திய அணியை ஜனாதிபதி திரெளபதி முர்மு பாராட்டியுள்ளார். இந்த தொடரில் ஒரு தோல்வியை கூட சந்திக்காமல் இருந்து, இந்தியா தனது ஆதிக்கத்தை விளையாட்டில் செலுத்தியுள்ளதாக முர்மு குறிப்பிட்டுள்ளார். மேலும், எதிர்வரும் விளையாட்டுகளிலும் இந்திய அணி வெற்றி பெற வேண்டும் எனவும் அவர் X தளத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!