News March 17, 2024

BIG BREAKING: வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்

image

அருணாச்சல் மற்றும் சிக்கிமில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தேதியை தேர்தல் ஆணையம் மாற்றியுள்ளது. இந்த இரண்டு மாநிலங்களில் உள்ள சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குகள் மட்டும் ஜூன் 4ஆம் தேதிக்கு பதிலாக ஜூன் 2ஆம் தேதியே எண்ணப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்த 2 சட்டமன்றங்களின் பதவிக்காலம் ஜூன் 2ஆம் தேதி நிறைவடைவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

Similar News

News November 22, 2025

கர்ப்பிணிகளுக்கு முற்றிலும் இலவசம்..!

image

பிரசவம் முடிந்து வீட்டிற்கு செல்லும் தாய்மார்களுக்கு தாய்-சேய் நல ஊர்தி சேவை திட்டத்தின் கீழ் இலவச ஆம்புலன்ஸ் சேவை கிடைக்கிறது. அரசு ஹாஸ்பிடலில் பிரசவம் பார்த்தால் மட்டுமே இந்த சேவை கிடைக்கும். அந்த மாவட்டத்தை விட்டு வேறு மாவட்டத்திற்கு செல்ல சேவை வழங்கப்படாது. இந்த சேவையை பெற, சிகிச்சை முடிந்து வீடு திரும்பும்போது 102 என்ற தொலைபேசி எண்ணை அழைக்கலாம். அவசர நேரத்தில் உதவும் SHARE THIS.

News November 22, 2025

TN-ல் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளது: அன்புமணி

image

சேலத்தில் திமுக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியளிப்பதாக அன்புமணி தெரிவித்துள்ளார். ஆளும்கட்சி நிர்வாகியே சுட்டுக்கொலை செய்யப்படும் அளவுக்கு TN-ல் சட்டம், ஒழுங்கு சீரழிந்துள்ளதாக அவர் விமர்சித்துள்ளார். திமுக ஆட்சிக்கு வந்த நாளில் இருந்து துப்பாக்கி கலாச்சாரம் தலைவிரித்தாடுவதாக கூறியுள்ள அவர், தமிழக மக்களுக்கு என்னதான் பாதுகாப்பு உள்ளது என கேள்வி எழுப்பியுள்ளார்.

News November 22, 2025

மல்லிகை விலை ₹4,000ஆக உயர்ந்தது!

image

சங்கரன்கோவில் மலர் சந்தையில் நேற்று ₹1,500-க்கு விற்கப்பட்ட மல்லிப்பூ இன்று(நவ.22) கிலோவுக்கு ₹4,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சபரிமலை சீசன் மற்றும் நாளை முகூர்த்த தினம் என்பதால் தோவாளை, ஆண்டிபட்டி, நிலக்கோட்டை, மதுரை, ஓசூர் உள்ளிட்ட மலர் சந்தைகளிலும், மல்லிகை மட்டுமல்லாமல் கனகாம்பரம், சம்பங்கி, முல்லை, அரளிப்பூ, செண்டுமல்லி, செவ்வந்தி உள்ளிட்ட பூக்களின் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.

error: Content is protected !!