News September 4, 2025
BIG BREAKING: அமைச்சர் துரைமுருகனுக்கு பிடிவாரண்ட்

அமைச்சர் துரைமுருகனுக்கு எதிராக சென்னை சிறப்பு நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. வரும் 15-ம் தேதிக்குள் பிடிவாரண்ட் ஆணையை செயல்படுத்த வேண்டும் என TN காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. 2007 – 2009 காலக்கட்டத்தில் வருமானத்திற்கு அதிகமாக ₹1.40 கோடி சொத்து சேர்த்ததாக 2011-ல் DVAC தொடர்ந்த வழக்கின் விசாரணைக்கு ஆஜராகததால் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
Similar News
News September 7, 2025
கார்ல் மார்க்ஸ் பொன்மொழிகள்

*மன துன்பங்களுக்கு ஒரே மருந்து உடல் வலி.
*மனிதன் தான் மதத்தை உருவாக்குகிறான், மதம் மனிதனை உருவாக்கவில்லை.
*எல்லா செல்வங்களுக்கும் மூலமாய் இருப்பது உழைப்பு.
*கயிற்றை நமக்கு விற்றவன்தான் நாம் தூக்கிலிடும் கடைசி முதலாளியாக இருப்பான்.
*பயனுள்ள பொருட்களை அதிகப்படியாக உற்பத்தி செய்வது பயனற்ற நபர்களை அதிகளவில் உருவாக்குகிறது. *ஜனநாயகம் என்பது சமூகவுடைமைக்கான பாதை.
News September 7, 2025
உலகக்கோப்பை: மாஸ் என்ட்ரி கொடுத்த மொராக்கோ

2026 உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு, முதல் ஆப்பிரிக்க நாட்டு அணியாக மொராக்கோ கால்பந்து அணி தேர்வாகியுள்ளது. நைஜருக்கு எதிரான தகுதிச்சுற்று போட்டியில் 5-0 என்ற கணக்கில் வென்றதன் மூலம் தொடருக்குள் நுழைந்துள்ளது. PSG நட்சத்திர வீரர் ஹகிமி இடம்பெற்றுள்ள இந்த அணியானது, 29, 38, 51, 69, 84-வது நிமிடங்களில் கோல் அடித்து வெற்றியை தன்வசப்படுத்தியது.
News September 7, 2025
₹150 கோடி வசூலை தாண்டிய லோகா

கல்யாணி பிரியதர்ஷன் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ள ‘லோகா சாப்டர் 1: சந்திரா’ படம் மொழிகளைக் கடந்து நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்நிலையில், இப்படம் ₹150 கோடி வசூலைத் தாண்டி, மலையாள திரையுலகின் பாக்ஸ் ஆபிஸில் புது சாதனையை படைத்துள்ளது. இதற்கு படத்தின் திரைக்கதை மிகப்பெரிய ப்ளஸ்ஸாக இருப்பதே காரணம். இதனால் நாளுக்கு நாள் தியேட்டர்களை நோக்கிச் செல்லும் ரசிகர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது.