News September 11, 2025
BIG BREAKING: பாமகவில் இருந்து அன்புமணி நீக்கம்

அன்புமணி மீது சுமத்தப்பட்ட 16 குற்றச்சாட்டுகளும் விசாரணையில் நிரூபணமானதால் பாமகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட அனைத்து பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்படுவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அரசியலில் இருக்கவே அன்புமணி தகுதியற்றவர் என கடுமையாக சாடியுள்ளார். அன்புமணியை நீக்குவது வருத்தமாக இருந்தாலும் கட்சியின் நலனுக்காக இந்த முடிவை எடுப்பதாக கூறியுள்ளார்.
Similar News
News September 11, 2025
கோலிவுட் Weekend விருந்து: நாளைக்கு மட்டும் 10 படம்!

நாளை செப்டம்பர் 12-ம் தேதி மட்டும் 10 தமிழ் படங்கள் ரிலீஸிற்கு தயாராக உள்ளன. ஜிவி பிரகாஷ் நடிப்பில் பிளாக்மெயில், அர்ஜுன் தாஸ் நடிப்பில் பாம், அதர்வா நடிப்பில் தணல் போன்ற படங்களுக்கு நல்ல எதிர்பார்ப்பு உள்ளது. அதே நேரத்தில் குமாரசம்பவம், காயல், யோலோ, மதுரை 16, அந்த 7 நாட்கள், உருட்டு உருட்டு & தாவூத் உள்ளிட்ட சிறு பட்ஜெட் படங்களும் இந்த வாரம் திரையரங்குகளை ஆக்கிரமிக்க ரெடியாகிவிட்டன.
News September 11, 2025
மரியாதை செய்யாத விஜய்.. வெடித்த அடுத்த சர்ச்சை

TVK தலைவர் விஜய், அடுத்த சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். இமானுவேல் சேகரனின் நினைவு தினத்தையொட்டி, உதயநிதி, நயினார், சீமான் உள்ளிட்ட தலைவர்கள் நேரில் மரியாதை செலுத்தினர். ஸ்டாலின், இபிஎஸ் தங்களது X பக்கத்தில் மரியாதை செலுத்தினர். ஆனால், விஜய் ஒரு பதிவு கூட போடவில்லை. இதுகுறித்து திமுகவின் ராஜீவ் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், தவெகவினர் நேரில் அஞ்சலி செலுத்துவார்கள் என கூறப்படுகிறது.
News September 11, 2025
தாத்தா வேண்டாம், பாட்டன் பெயர் வைக்கலாம்: சீமான்

மதுரை ஏர்போர்ட்டுக்கு பசும்பொன் முத்துராமலிங்க தேவர் பெயரை சூட்ட வேண்டும் என EPS கூறியதற்கு கிருஷ்ணசாமி, ஜான் பாண்டியன் ஆகியோர் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், ஏர்போர்ட்டுக்கு தாத்தாக்கள் முத்துராமலிங்க தேவர், இமானுவேல் சேகரன் என யார் பெயரும் வைக்க வேண்டாம் என சீமான் கூறியுள்ளார். மாறாக, பாட்டன் பாண்டியன் நெடுஞ்செழியன் பெயரை வைக்கலாம் என்றும் அவர் பரிந்துரைத்துள்ளார். உங்கள் கருத்து என்ன?