News March 28, 2026
BIG BREAKING குமரியில் களம் காணும் காங்கிரஸ்

தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வரும் ஏப்.23 ம் தேதி நடைபெற உள்ள நிலையில், திமுக கூட்டணி கட்சிகள் போட்டியிடும் தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி கன்னியாகுமரி மாவட்டத்தில் விளவங்கோடு, கிள்ளியூர், குளச்சல் ஆகிய மூன்று தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சற்று நேரத்தில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை மு.க ஸ்டாலின் வெளியிடுவார் என தகவல் வெளியாகியுள்ளது.
Similar News
News March 29, 2026
குமரியில் ஒரு தொகுதியில் அதிமுக Vs திமுக நேரடி போட்டி

கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆறு சட்டமன்ற தொகுதிகளில் கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதியில் திமுகவும் அதிமுகவும் நேரடியாக போட்டியிடுகிறது. குளச்சல், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியும் பாரதிய ஜனதா கட்சியும் நேரடியாக போட்டியிடுகிறது. பத்மநாபபுரம் தொகுதியில் CPI(M) – பாஜகவும் போட்டியிடுகிறது. நாகர்கோவில் தொகுதியில் திமுகவும் பாஜகவும் போட்டியிடுகிறது.
News March 29, 2026
குமரி: VOTER ID ல இத மாத்தனுமா?

குமரி மக்களே உங்க VOTER ID-ல பழைய போட்டோ இருக்கா? அதை மாத்த வழி உண்டு.
இங்கு <
1.ஆதார் எண் (அ) VOTER ID எண் பதிவு பண்ணுங்க.
2.CORRECTIONS OFENTRIES ஆப்ஷன் – ஐ தேர்ந்தெடுங்க.
3.அதார் எண், முகவரி போன்ற உங்க விவரங்களை பதிவு பண்ணுங்க.
4.போட்டோ மாற்றம்
5.புது போட்டோவை பதிவிறக்கவும்
15 – 45 நாட்களில் உங்க புது போட்டோ மாறிடும்..இதை VOTER ID வச்சு இருக்கிறவங்களுக்கு SHARE பண்ணுங்க.
News March 29, 2026
BREAKING குமரி: த.வெ.க.,வேட்பாளர்கள் அறிவிப்பு

வரும் சட்டமன்ற தேர்தலில் த.வெ.க., 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுகிறது. இந்நிலையில் 234 தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்களை சற்றுமுன் விஜய் அறிமுகம் செய்து வைத்தார். அதில்,
கன்னியாகுமரி – மாதவன்
நாகர்கோவில் – பெர்வீன் கிங்க்ஸ்
குளச்சல் – பிரேம் அலேக்ஸ் லாரன்ஸ்
பத்மநாபபுரம் – கிருஷ்ணகுமார்
விளவங்கோடு -மைக்கேல்குமார்
கிள்ளியூர் -சபீன்


