News August 7, 2024
Big Boss: கமல் விலக இதுதான் உண்மை காரணமா?

Big Boss கடந்த சீசனில், பிரதீப் ஆண்டனியின் வெளியேற்றம் பெரும் விமர்சனத்திற்கு உள்ளாகி, கமலை மாற்ற வேண்டும் என சமூக வலைதளங்களில் எதிர்ப்புக்குரல் எழுந்தது. இதுதான் அவர் விலக உண்மையான காரணம் என இணையத்தில் தகவல் பரவி வருகிறது. அவர் பல காரணங்களை கூறினாலும், தேர்தல் பிரச்சாரம், படப்படிப்பு என படு பிஸியாக இருந்தபோதும், அவர் நிகழ்ச்சியை நடத்தியதாக பலர் கூறிவருகின்றனர்.
Similar News
News December 10, 2025
குடியுரிமை பெறும் முன்னரே வாக்காளர் ஆனது எப்படி?

இந்திய குடியுரிமையை பெறும் முன், வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்த்தது தொடர்பாக விளக்கம் அளிக்க சோனியா காந்திக்கு டெல்லி கோர்ட் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. 1983-ல் சோனியா காந்தி இந்திய குடியுரிமை பெற்றார். ஆனால், 1980-ல் அவரது பெயர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றதாக விகாஷ் திரிபாதி என்பவர் மனுத்தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பாக, டெல்லி போலீஸ் விளக்கம் அளிக்கவும் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
News December 10, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: செங்கோன்மை ▶குறள் எண்: 545 ▶குறள்: இயல்புளிக் கோலோச்சும் மன்னவன் நாட்ட பெயலும் விளையுளும் தொக்கு. ▶பொருள்: நீதி வழுவாமல் ஓர் அரசு நாட்டில் இருக்குமேயானால் அது, பருவகாலத்தில் தவறாமல் பெய்யும் மழையினால் வளமான விளைச்சல் கிடைப்பதற்கு ஒப்பானதாகும்.
News December 10, 2025
8 ஆண்டுகளுக்கு பின் Ring-ல் ஏறும் கிரேட் காளி!

WWE பிரியர்களுக்கு ‘தி கிரேட் காளி’ என்ற பெயரை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. அவர் ஓய்வு பெற்ற 8 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது மீண்டும் Ring-ல் களமிறங்க உள்ளார். ஆனால் இந்த முறை WWE-ல் அல்ல, மாறாக அவரது சொந்த நிறுவனமான CWE-ல்.
2026 ஜனவரி 25-ல் போட்டி நடைபெற உள்ளது. காளி சண்டை போடுவதை பார்க்க யாரெல்லாம் வெயிட்டிங்? கமெண்ட் பண்ணுங்க.


