News June 28, 2024

பைடன் – டிரம்ப் நேரடி விவாதம் தொடக்கம்

image

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் பைடன் – டிரம்ப் இடையேயான நேரடி விவாதம் தொடங்கியது. உலகமே எதிர்பார்க்கும் இந்த விவாதம் அட்லாண்டாவில் 90 நிமிடங்கள் நடைபெறுகிறது. அமெரிக்க அதிபர் தேர்தல் வரும் நவம்பர் மாதம் நடைபெற உள்ளது. தற்போதைய அதிபர் ஜோ பைடன் ஜனநாயக கட்சி சார்பில் மீண்டும் களமிறங்குகிறார். அவரை எதிர்த்து குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டிரம்ப் போட்டியிடுகிறார்.

Similar News

News November 22, 2025

மாநகரில் இரவு காவல் பணி அதிகாரி விபரம்

image

திருநெல்வேலி மாநகர போலீஸ் கமிஷனர் சந்தோஷ் ஹாத்தி மணி உத்தரவின் படி நெல்லை மாநகரில் இன்று (நவ.22) இரவு முதல் நாளை காலை 6 மணி வரை காவல் பணியில் ஈடுபடும் காவல் அதிகாரிகள் பெயர் விபரம் காவல் சரகம் வாரியாக மாநகர காவல்துறை அறிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் கைபேசி எண்ணும் தரப்பட்டுள்ளது. காவல் உதவி தேவைப்படுபவர்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியை தொடர்பு கொள்ளலாம்.

News November 22, 2025

இந்திய அரசு மீது மக்களுக்கு எவ்வளவு நம்பிக்கை தெரியுமா?

image

2025 எடெல்மேன் டிரஸ்ட் பாரோமீட்டரின்படி, அரசாங்கம் மீதான பொதுமக்களின் நம்பிக்கையை அளவிடும் உலகளாவிய கணக்கெடுப்பில், இந்தியா அசத்தியுள்ளது. இந்த பட்டியலில், எந்தெந்த நாடுகள் டாப் 8 இடங்களை பிடித்துள்ளன என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க.
இதில் இந்தியா எந்த இடத்தில் இருக்கு என்று பாருங்க, கமெண்ட்ல சொல்லுங்க. SHARE

News November 22, 2025

பிக்பாஸ் எவிக்‌ஷன்: கெமிக்கு குட்பை

image

பிக்பாஸில் இந்த வார எலிமினேஷனாக கெமி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளார். கனி, வியானா, அரோரா, விக்ரம் உள்ளிட்ட 13 பேர் இந்த வார நாமினேஷனில் இடம்பெற்றிருந்தனர். இந்நிலையில், குறைவான வாக்குகளை பெற்று கெமி எவிக்ட் செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எவிக்‌ஷனில் இருந்து பிரஜின், வியானா தப்பியதால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். வரும் வாரத்தில் வைல்ட் கார்டு என்ட்ரி உள்ளதாக கூறப்படுகிறது.

error: Content is protected !!