News June 18, 2024

டிரம்புக்கு எதிரான பரப்புரைக்கு ₹417 கோடி ஒதுக்கிய பைடன்

image

அமெரிக்க அதிபர் தேர்தல் இன்னும் 4 மாதத்தில் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலை முன்னிட்டு அதிபர் ஜோ பைடன் & குடியரசு கட்சி சார்பில் போட்டியிடும் டிரம்ப் இடையிலான நேருக்கு நேர் விவாதம் அட்லாண்டாவில் விவாதம் ஜூன் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. அதற்கு முன்னதாக டிரம்ப்பை குறிவைத்து அவதூறு வழக்கு, பாலியல் வழக்கு உள்ளிட்டவை குறித்து பிரசாரம் செய்ய அதிபர் ஜோ பைடனின் ஜனநாயக கட்சி ₹417 கோடியை ஒதுக்கியுள்ளது.

Similar News

News March 26, 2026

இனி இவர்களுக்கு ரயில் பயணம் ஃப்ரீ..

image

சேனா, நௌசேனா, வாயுசேனா விருதுகளை பெற்ற ராணுவ வீரர்கள் வாழ்நாள் முழுவதும் ரயில்களில் இலவசமாக பயணம் செய்யலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. மேலும், உயிரிழந்த வீரர்களின் துணைவர் (மறுமணம் வரை) அல்லது திருமணம் ஆகாத நிலையில் உயிரிழந்தவர்களின் பெற்றோருக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது. First Class, 2AC, AC Chair Car வகுப்புகளில் தேவையானதை தேர்வு செய்து அவர்கள் இலவசமாக பயணிக்கலாம்.

News March 26, 2026

BREAKING: தவெகவில் இணைந்தார் டி.செல்வம்

image

கட்சி விரோத நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறி காங்., மாநில பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்ட <<19471779>>டி.செல்வம்<<>>, தற்போது தவெகவில் இணைந்துள்ளார். பனையூர் தவெக தலைமை அலுவலகத்தில் விஜய் முன்னிலையில் அவர் அக்கட்சியில் இணைந்துள்ளார். டி.செல்வத்திற்கு தவெக துண்டை அணிவித்து விஜய் வரவேற்றார். அதிருப்தியில் இருந்த காங்கிரஸ் நிர்வாகிகள் சிலரும் தவெகவில் இணைந்திருப்பதாகக் கூறப்படுகிறது.

News March 26, 2026

திமுக மண்ணைக் கவ்வுவது உறுதி: விஜய்

image

மகளிர் பற்றி ஆபாசமாக பேசுவோர் மீது திமுக அரசு நடவடிக்கை எடுப்பதில்லை என விஜய் குற்றஞ்சாட்டியுள்ளார். தனது X பதிவில், என் அம்மா, அக்கா, தங்கைகளை திமுகவின் கைக்கூலி ஒருவர் வாய்க்கு வந்தபடி பேசியிருப்பதாக விஜய் கூறியுள்ளார். தவெகவை சீண்டுவதாக நினைத்து ஒட்டுமொத்த மகளிரை அவமதிக்கும் காரணத்தால், தேர்தலில் தாய்க்குலத்தின் ஏகோபித்த முடிவால் தீய சக்தி திமுக மண்ணைக் கவ்வுவது உறுதி என்றும் தெரிவித்துள்ளார்.

error: Content is protected !!