News April 28, 2025
IPL வரலாற்றை மாற்றி எழுதிய புவனேஷ்வர் குமார்!

RCB பவுலர் புவனேஷ்வர் குமார், நேற்று 3 விக்கெட் வீழ்த்தினார். இதன் மூலம், IPL-ல் அதிக விக்கெட் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். புவனேஷ்வர் குமார் 185 மேட்சில், 193 விக்கெட்டை வீழ்த்தியுள்ளார். இந்த பட்டியலில் முதல் இடத்தில் 214 விக்கெட்டுகளுடன் யுஸ்வேந்திர சாஹல் இருக்கிறார். சாஹலை முந்துவாரா புவனேஷ்வர் குமார்?
Similar News
News October 19, 2025
திமுகவால் செய்யமுடியாததை EPS செய்துகாட்டினார்

தமிழக நலன் குறித்து அக்கறையில்லாமல் மத்திய அரசுடன் பகைமை பாராட்டுகிறது திமுக என ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார். சொத்துவரி, மின் கட்டண உயா்வு குறித்து கேள்வி எழுப்பினால், மத்திய அரசு நிதி தராததே காரணம் என தமிழக அரசு சொல்கிறது என்றார். மேலும், ஊரக வேலை உறுதி திட்ட நிதியை தமிழகத்துக்கு திமுகவால் பெற முடியவில்லை எனவும், தனிநபராக டெல்லிக்கு சென்று EPS இதை செய்துமுடித்தார் எனவும் அவர் கூறினார்.
News October 19, 2025
காலை 10 மணி வரை 24 மாவட்டங்களில் மழை: IMD

நெல்லை, விருதுநகர், தேனி, குமரி, தென்காசி மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என IMD கணித்துள்ளது. மேலும், நீலகிரி, கோவை, தூத்துக்குடி, மதுரை, ஈரோடு, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, மயிலாடுதுறை, தி.மலை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம் மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் எனவும் கூறப்பட்டுள்ளது.
News October 19, 2025
பிஹார் தேர்தல்: நடிகையின் வேட்புமனு நிராகரிப்பு

பிஹார் தேர்தலில் போஜ்புரி நடிகை சீமா சிங்கின் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது. ஆவணங்களில் உள்ள முரண்பாடுகள் காரணமாக வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சிராக் பஸ்வானின் LJP (RV) கட்சி சார்பாக அவர் போட்டியிட இருந்தார். சிறிய தவறால் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், மறுபரிசீலனைக்காக மீண்டும் சமர்பிக்கப்பட்டுள்ளதாகவும் சிராக் பஸ்வான் தெரிவித்துள்ளார்.