News March 16, 2024
கோபி அருகே தார் சாலை பணிக்கு பூமி பூஜை

கோபி தொகுதிக்கு உட்பட்ட கோட்டுபுள்ளம்பாளையம் ஊராட்சியில் சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16 லட்சம் மதிப்பிலான தார் சாலை அமைக்கும் பணிக்கு பூமிபூஜை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். உடன் யூனியன் சேர்மன் மௌதீஸ்வரன், மாவட்ட கவுன்சிலர் அனுராதா, ஊராட்சி தலைவர் முத்துக்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Similar News
News January 18, 2026
ஈரோடு மக்களிடம் கட்டாயம் இருக்க வேண்டிய எண்கள்!

1). ஈரோடு மாவட்ட கட்டுப்பாட்டு அறை 1077. 2.) ஈரோடு மாவட்ட ஆட்சியர் 0424-2260211 3).மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் 0424-2260211. 4).விபத்து அவசர வாகன உதவி 102. 5).குழந்தைகள் பாதுகாப்பு 1098. 6).பெண்கள் உதவி எண் 181. 7). முதியோர்கள் உதவி எண் 14567. 8).பேரிடர் கால உதவி 1077. 9).சைபர் க்ரைம் உதவி எண்1930. 10).இரத்த வங்கி சேவை 1910, இவற்றை உங்களது நண்பர்களுக்கு பகிரவும்.
News January 18, 2026
ஈரோடு: பசு மாடு வாங்க ரூ.1,00,000

தமிழக அரசின் கறவை மாடு வாங்குவதற்கான கடன் திட்டம் மூலம், ரூ.1,20,000 வரை கடன் வழங்கப்படுகிறது. இதில் பயனடைய விரும்புபவர்கள், சாதிச் சான்றிதழ், பிறப்பிடச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு விபரங்களுடன், மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியம் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும், பயனாளிகள் 18 வயது முதல் 60 வயதுக்குள் இருக்க வேண்டும். யாருக்காவது உதவும் ஷேர் பண்ணுங்க!
News January 18, 2026
ஈரோடு காவல்துறை எச்சரிக்கை ALERT

ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பில் இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. சமூக வலைதளங்கள் மற்றும் ஆன்லைன் கணக்குகளுக்கு மிகவும் வலிமையான கடவுச்சொற்களை (Strong Passwords) பயன்படுத்த வேண்டும் என்றும், அவற்றை எக்காரணம் கொண்டும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக்கூடாது என்றும் காவல்துறை எச்சரித்துள்ளது.


