News March 19, 2025

மீண்டும் திரைக்கு வரும் ‘பகவதி’

image

ஆக்‌ஷன் ஹீரோவாக விஜய்யை உயர்த்தியதில் ‘பகவதி’ படத்திற்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. அப்படிப்பட்ட பகவதி படம் வெளியாகி 23 ஆண்டுகள் ஆன நிலையில், தற்போது ரீ-ரிலீஸ் செய்யப்படுகிறது. மார்ச் 21ஆம் தேதி படம் திரைக்கு வர உள்ளதாக தயாரிப்பு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே விஜய்யின் ‘கில்லி’ படம் ரீ- ரிலீஸ் செய்யப்பட்டு, வசூலில் சக்கைபோடு போட்டது குறிப்பிடத்தக்கது. ரெடியா இருங்க ரசிகர்களே!

Similar News

News March 19, 2025

இளையராஜாவுக்கு சூர்யா குடும்பத்தின் பரிசு

image

கடந்த மார்ச் 8ஆம் தேதி லண்டனில் சிம்பொனியை அரங்கேற்றம் செய்து இசைஞானி இளையராஜா சாதனை படைத்தார். இதற்கு பிரதமர், முதல்வர், திரைப் பிரபலங்கள், ரசிகர்கள் என அனைவரும் அவரை வாழ்த்து மழையில் நனைத்தனர். அந்த வகையில் நடிகர் சிவக்குமார், அவரது மகன் சூர்யா மற்றும் மகள் பிருந்தாவுடன் இளையராஜாவை நேரில் சந்தித்து வாழ்த்தினார். அப்போது சிவகுமார் தங்க சங்கிலியை அவருக்கு பரிசாக அணிவித்தார்.

News March 19, 2025

திருமணத்தை பதிவு செய்வது கட்டாயமா?

image

திருமணத்தை பதிவு செய்ய வேண்டுமா? என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். இதுகுறித்து 2006இல் சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. பெண்கள் நலனுக்காக திருமணப் பதிவு கட்டாயம் என சுப்ரீம் கோர்ட் ஆணையிட்டது. அதன்படி, 1955 இந்து திருமணச் சட்டம் (அ) 1954 சிறப்பு திருமணச் சட்டத்தின்கீழ் 90 நாட்களுக்குள் பதிவு செய்யலாம். அந்த சான்று, சொத்துரிமை, விவாகரத்து, குழந்தை பாதுகாப்புக்கு மிகவும் அவசியம் ஆகும்.

News March 19, 2025

பேண்ட் பாக்கெட்டில் செல்போன் வைக்கிறீங்களா… எச்சரிக்கை!

image

செல்போன் வெடித்து ஒருவருக்கு ஆணுறுப்பே பாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ம.பி.,யில் மார்க்கெட் சென்றுவிட்டு பைக்கில் வீடு திரும்பி கொண்டிருந்த இளைஞரின் பேண்ட் பாக்கெட்டில் இருந்த போன் திடீரென வெடித்தது. இதில் அவரின் ஆணுறுப்பு சேதம் அடைந்ததுடன், கீழே விழுந்ததால் தலையிலும் காயமடைந்தார். செகன்ட் ஹேண்ட் போனை இரவு முழுவதும் சார்ஜ் போட்டதே இதற்கு காரணம் என்கின்றனர். ஓவர் சார்ஜ் போடாதீங்க BROTHERS!

error: Content is protected !!