News December 14, 2024

பீகார் இளைஞர்களை பயமுறுத்தும் ‘பகட்வா விவாகம்’

image

அரசு மற்றும் அதிகாரிகள், ஆசிரியர்கள், ஐஏஸ், ஐபிஎஸ் ஆபீசர்ஸ், இப்படி படித்த, அரசு வேலையில் இருக்கும் இளைஞர்களை கடத்தி, மணமுடிக்கும் வழக்கம் பீகாரில் அதிகரித்து வருகிறது. இங்கு உயர்சாதியினர் மத்தியில் பெண்ணுக்கு திருமணம் செய்ய மிக அதிக வரதட்சணை கொடுக்க வேண்டியுள்ளது. வசதியில்லாத பெண் வீட்டார், இந்த கடத்தல் வழியை பின்பற்றி திருமணத்தை நடத்திவிடுகின்றனர். எதிர்த்து கேட்டால் வரதட்சணை புகார் வருமாம்.

Similar News

News March 17, 2026

உற்சாகம் பொங்கும் ரஷ்மிகா – விஜய் ஹல்டி PHOTOS

image

வெட்கம் கலந்த ரஷ்மிகாவின் புன்னகைக்கு ரசிகர்கள் கிறங்கி வருகின்றனர். திருமண நிகழ்வில் நடந்த ஹல்டி விழாவில் எடுக்கப்பட்ட போட்டோஸை ரஷ்மிகா இன்ஸ்டாவில் பகிர, ரசிகர்கள் ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர். அத்துடன், ‘Sema Cute Pair’ என்றும் நெட்டிசன்கள் கூறுகின்றனர். 2017-ல் மலர்ந்த காதல், பிப்.27-ல் திருமண பந்தத்தில் கைகூடியது. அப்போது, தெலுங்கு & கன்னட முறைப்படி திருமணச் சடங்குகள் நடைபெற்றன.

News March 17, 2026

ஸ்டாலினுக்கு அழுத்தம் கொடுக்கும் கூட்டணி கட்சிகள்!

image

தேமுதிகவுக்கு எத்தனை சீட்டு என்பதை சொன்ன பிறகு தங்களை அழையுங்கள் என திமுக தலைமைக்கு கம்யூனிஸ்ட் கட்சிகள் கூறியுள்ளனவாம். இதனால், திமுக தொகுதிப் பங்கீட்டு குழுவினர் கடும் அதிர்ச்சியை அடைந்துள்ளனர். ஏற்கெனவே காங்கிரஸுக்கு கூடுதல் சீட்டு ஒதுக்கியதால் தங்களுக்கும் கூடுதல் சீட்டுகள் வேண்டும் என CPI, CPM, VCK, ஸ்டாலினுக்கு கடும் நெருக்கடியை கொடுத்து வருவதால் தொகுதி உடன்பாட்டில் இழுபறி நீடிக்கிறது.

News March 17, 2026

FLASH: காருடன் எரிந்த நிலையில் கிடந்த 4 சடலங்கள்!

image

நெல்லை, திசையன்விளை பகுதியில் உள்ள பனங்காட்டில் சொகுசு கார் ஒன்றில் எரிந்த நிலையில், 4 சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உடல்களை கைப்பற்றிய போலீசார் மோப்ப நாய்கள், தடயவியல் நிபுணர்கள் உதவியுடன் விசாரணையில் இறங்கியுள்ளனர். நள்ளிரவில் நடந்த இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.

error: Content is protected !!