News October 18, 2025
சூர்யா படத்தில் பகத் பாசில்?

இந்திய அளவில் தற்போது பிரபலமான மலையாள நடிகர் என்றால் அது பகத் பாசில்தான். தனது நடிப்பாற்றலால், பெரும் ரசிகர்கள் பட்டாளத்தை சேர்த்துள்ள அவர், சூர்யாவின் அடுத்த படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. ஜித்து மாதவன் இயக்கத்தில் சூர்யா 47-ல் அவரை முக்கிய கேரக்டரில் நடிக்க வைக்க பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறதாம். முன்னதாக, ஜீத்து மாதவன்தான் பகத்தின் ‘ஆவேசம்’ படத்தை இயக்கி இருந்தார்.
Similar News
News October 18, 2025
மூன்றாம் பாலினத்தவர் மீது பாகுபாடு.. SC அதிருப்தி

மூன்றாம் பாலினத்தவரின் உரிமைகளை பாதுகாப்பதில் மத்திய, மாநில அரசுகள் அலட்சியம் காட்டுவதாக சுப்ரீம் கோர்ட் வேதனை தெரிவித்துள்ளது. அவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பு வழங்கும் சட்டங்கள் முழு மூச்சில் செயல்படுத்தப்படவில்லை என்றும் அவை இறந்த கடிதங்கள் ஆகிவிட்டன எனவும் SC கூறியுள்ளது. எனவே, உரிமைகள் வழங்குவதற்கு செயல்திட்டத்தினை உருவாக்க ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து SC உத்தரவிட்டுள்ளது.
News October 18, 2025
தீபாவளி ஸ்பெஷல் விளக்கு கோலங்கள்!

தீபாவளி திருநாளில் வீட்டு வாசலில் வண்ண விளக்கு கோலமிட்டு அதன் மீது தீபம் ஏற்றாவிடில் அன்றைய நாள் முழுமையடையாது. நீண்ட நேரம் எடுக்காமல், எளிதில் அரைமணி நேரத்திற்குள் போடக்கூடிய தீபாவளி ஸ்பெஷல் கோலங்கள் இங்கு போட்டோக்களாக பகிரப்பட்டுள்ளன. SWIPE செய்து பார்த்து, உங்களுக்கு பிடித்த கோலத்தை தேர்ந்தெடுத்து வீட்டு வாசலை கோலமிட்டு அலங்கரிக்கவும்..
News October 18, 2025
தீபாவளி நாளில் வெளியாகிறது கருப்பு First Single

RJ பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள படம் ‘கருப்பு’. இப்படத்தின் முதல் பாடல் தீபாவளியன்று (அக்.20) வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி ரிலீஸாக கோதாவில் குதிக்க வேண்டிய இப்படம், சில காரணங்களால் தள்ளிப்போனது. இந்நிலையில், தீபாவளி அன்று பாடல் மூலம் ரசிகர்களை குஷிப்படுத்த படக்குழு திட்டமிட்டுள்ளது. சாய் அபயங்கர் இசையில் உருவாகியுள்ள மாஸ் பாடலை கேட்க ரெடியா?