News November 23, 2024
BGT: ஆதிக்கம் செலுத்தும் இந்தியா 84/0

உணவு இடைவேளைக்கு முன்பு 104 ரன்களுக்கு ஆஸி. அணி ஆல் அவுட்டானது. 2வது இன்னிங்ஸை துவங்கிய இந்திய அணி 84/0 ரன்களை எடுத்து பொறுமையான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 2ம் நாள் டி இடைவேளை வரை, ஓப்பனர்கள் ஜெய்ஸ்வால் 42(88) ரன்களும், கே.எல்.ராகுல் 34(70) ரன்களும் எடுத்துள்ளனர். தற்போது வரை இந்திய அணி 130 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
Similar News
News November 26, 2025
இளையராஜாவுக்கு நன்றி என்று போடலாமே: கங்கை அமரன்

இளையராஜாவிடம் கேட்டாலே அவருடைய பாடல்களுக்கு காப்பிரைட் கொடுத்துவிடுவார் என கங்கை அமரன் கூறியுள்ளார். தான் இசையமைத்த பாடல்கள் வேறு படங்களில் பயன்படுத்தப்படுவதற்கு எதிராக இளையராஜா காப்பிரைட் வழக்கு தொடர்வது விமர்சனத்திற்கு உள்ளாகிறது. இந்நிலையில், இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள கங்கை அமரன், படத்தில் இந்த பாடலை வழங்கிய இளையராஜாவுக்கு நன்றி என்று போட்டால் என்ன தவறு என்றும் கேள்வி எழுப்பினார்.
News November 26, 2025
‘Word of the Year 2025’ இது தானா?

திடீரென உருவான ஒரு வார்த்தையை மக்கள் அதிகளவில் விரும்பி பேசினால், அதை Word of the year என்று ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி அறிவிக்கும். அதன்படி, 2025-ன் Word of the year பட்டியலில் Aura Farming, Biohack, Rage Bait இடம்பெற்றுள்ளன. இதன் முடிவுகள் டிச.1-ம் தேதி அறிவிக்கப்படவுள்ளன. மேற்கண்ட வார்த்தைகளை நீங்கள் பயன்படுத்தி இருக்கிறீர்களா? இந்த வருடம் நீங்கள் அடிக்கடி பயன்படுத்திய வார்த்தை எது?
News November 26, 2025
சார்லஸ் டார்வின் பொன்மொழிகள்

*ஒரு மணிநேரத்தை வீணடிக்க துணிந்த ஒருவன், வாழ்க்கையின் மதிப்பை அறியாதவன்.
*ஒரு மனிதனின் நட்பு, அவனது மதிப்புக்குரிய சிறந்த செயல்பாடுகளில் ஒன்றாகும்.
*ஒரு மொழி என்பது ஒரு உயிரினத்தை போன்றது, அழிந்துபோனால் ஒருபோதும் மீண்டும் தோன்றாது.
*எல்லா உயிரினங்கள் மீதும் அன்பு செலுத்துவதே மனிதனின் மிக உயர்ந்த பண்பு.


