News March 6, 2025
“போலி போட்டோஷூட் அப்பா” கவனம் செலுத்துங்க: இபிஎஸ்

கடந்த 24 மணிநேரத்தில் நடந்த குற்றச் சம்பவங்களை குறிப்பிட்டு, திமுக அரசை இபிஎஸ் விமர்சித்துள்ளார். ஸ்டாலின் மாடல் ஆட்சியில் யாருக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் துளியும் பாதுகாப்பு இல்லை. முதல்வர் எவ்வித கவனமும் செலுத்தாமல் அலட்சியமாக இருப்பதால், சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கின்றது. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க “போலி போட்டோஷூட் அப்பா”வை வலியுறுத்துகிறேன் என தெரிவித்துள்ளார்.
Similar News
News March 7, 2025
பின்வாங்கினார் டொனால்ட் டிரம்ப்

மெக்சிகோ நாட்டின் மீதான வரி விதிப்பை 4 வாரங்களுக்கு நிறுத்தி வைப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவித்துள்ளார். அவர் அதிபராக பொறுப்பேற்றவுடன், அண்டை நாடுகளான கனடா & மெக்சிகோ பொருட்கள் மீது 25% இறக்குமதி வரி விதித்தார். இது வர்த்தகப் போரை உருவாக்கும் நிலை ஏற்பட்டதால், சில பொருட்களுக்கு வரியை நிறுத்திவைத்து, டிரம்ப் பின் வாங்கியுள்ளார். ஆனால், கனடா மீதான வரிகள் குறைக்கப்படவில்லை.
News March 7, 2025
ராசி பலன்கள் (07 – 03 – 2025)

➤மேஷம் – நன்மை ➤ரிஷபம் – செலவு ➤மிதுனம் – லாபம் ➤கடகம் – போட்டி ➤ சிம்மம் – விவேகம் ➤கன்னி – தடங்கல் ➤துலாம் – அமைதி ➤விருச்சிகம் – சாந்தம் ➤தனுசு – அன்பு ➤மகரம் – மகிழ்ச்சி ➤கும்பம் – வெற்றி ➤மீனம் – இன்பம்.
News March 7, 2025
கூட்டிக் கழிச்சு பாருங்க. கணக்கு சரியா வரும்

1 முதல் 9க்குள் ஏதாவது ஒரு நம்பரை நினைத்துக் கொள்ளுங்கள். அதை 3ஆல் பெருக்குங்கள். அதில் வரும் விடையோடு 3ஐ கூட்டுங்கள். அதில் கிடைக்கும் விடையை மீண்டும் மூன்றால் பெருக்குங்கள். இப்போது உங்களுக்கு ஒரு இரட்டை இலக்க எண் கிடைத்திருக்கும். அந்த இரண்டு இலக்கங்களையும் கூட்டுங்கள். இப்போது, உங்களுக்கு கிடைத்திருக்கும் விடை 9. விடை சரியாக இருந்தால் ஷேர் பண்ணுங்க.