News May 26, 2024
போலி வேலை வாய்ப்பு குறித்து எச்சரிக்கை

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறுவோரை நம்பி ஏமாறாமல் இளைஞர்கள் கவனமாக இருக்க வேண்டும் என்று தமிழக அரசு எச்சரித்துள்ளது. இதுகுறித்து அயலக தமிழர் நலத்துறை வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், “நேர்காணலுக்கு செல்லும் முன் நிறுவனம் குறித்து விசாரிக்க வேண்டும், விசா எடுப்பதற்கு முன் குறிப்பிட்ட பணி வாய்ப்பு குறித்து துணை தூதரகத்தில் விசாரிக்க வேண்டும்” என்று பல அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
Similar News
News March 12, 2026
பிறந்தநாள் வாழ்த்து போட்டோ அனுப்புங்க

இன்று (மார்ச் 12) பிறந்தநாள் காணும் அனைவருக்கும் வாழ்த்துகள்! பிறந்தநாளுக்கு வாழ்த்து சொல்ல விரும்புபவர்களின் போட்டோவை Email – way2tamilusers@way2news.com-க்கு அனுப்புங்க. Note: பிறந்தநாளுக்கு முந்தைய நாள் இரவு 10 மணிக்குள் வாழ்த்துகளை அனுப்பவும். முதலில் அனுப்பும் 20 பேரின் புகைப்படங்கள் மட்டுமே இடம்பெறும். உங்கள் அன்புக்குரியவர்களை வாழ்த்துங்கள். தெளிவான லேண்ட்ஸ்கேப் வாழ்த்து போட்டோ அனுப்புங்க.
News March 12, 2026
திமுகவின் பகல் கனவு பலிக்காது: GK வாசன்

தேர்தலுக்கு முன்பே NDA வெற்றி கூட்டணியாக உலா வந்து கொண்டிருக்கிறது என GK வாசன் கூறியுள்ளார். திருச்சியில் பேசிய அவர், திமுக மீதான PM-ன் குற்றச்சாட்டுகள் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது என்றார். வாக்குறுதியை நிறைவேற்றாத, சட்ட ஒழுங்கை சீர்குலைத்த திமுகவிற்கு எதிராக எதிர்மறை வாக்குகள் அதிகரித்து வருகிறது என்றும், மீண்டும் ஆட்சிக்கு வருவோம் என்ற திமுகவின் பகல் கனவு பலிக்காது எனவும் தெரிவித்தார்.
News March 12, 2026
SPORTS 360°: இந்தியா அபார வெற்றி

*மகளிர் ஹாக்கி WC குவாலிஃபையர்ஸில், இந்தியா 4-1 என்ற கோல் கணக்கில் வேல்ஸை வீழ்த்தி உலகக் கோப்பைக்கு தகுதி *சுவிஸ் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர், முதல் சுற்றில் கிரண் ஜார்ஜ் 23-21, 21-19 செட் கணக்கில் சிங்கப்பூர் வீரரை வீழ்த்தினார் *கலப்பு இரட்டையர் முதல் சுற்றில் துருவ்-தணிஷா இணை வெற்றி *பாகிஸ்தானுக்கு எதிரான முதல் ODI-ல் 8 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசம் வெற்றி


