News April 29, 2025
அமெரிக்காவின் துரோகம்: மார்க் கார்னி வெற்றிப் பேச்சு

அமெரிக்க துரோகத்தை கனடா மக்கள் ஒருபோதும் மறக்க வேண்டாம் என அந்நாட்டின் <<16252207>>PM <<>>மார்க் கார்னி கூறியுள்ளார். அதோடு, கனடாவை வலுவாக்க மக்கள் உத்தரவிட்டுள்ளனர் எனக் கூறிய PM, வரவுள்ள நாள்களும், மாதங்களும் மிகுந்த சவாலாக இருக்கும் என்று தெரிவித்துள்ளார். பெரும்பான்மையை நெருங்காவிடிலும், சிறு கட்சிகளின் ஆதரவுடன் மீண்டும் ஆட்சியை அமைக்கும் நிலையில் லிபரல் கட்சி உள்ளதால் தொண்டர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.
Similar News
News April 29, 2025
சுக்கிரன் பெயர்ச்சி: யோகம் அடிக்கும் 3 ராசிகள்

சுக்கிரன் கடந்த ஏப்.26-ம் தேதி, உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சியானார். இதனால் அதிக நன்மைகள் பெறும் 3 ராசிகள்: *மகரம்- தன்னம்பிக்கை அதிகரிக்கும், ஊதிய உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும். உறவுகள் வலுப்படும் *கும்பம்: முதலீடுகள் பெருகும். குடும்ப உறவு மேம்படும். அலுவலக அந்தஸ்து உயரும் *மீனம்: திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். தொழில், வணிகத்தில் முன்னேற்றம். ஆரோக்கியம் சிறக்கும்.
News April 29, 2025
யார் இந்த பி.ஆர்.கவாய்?

SC-ன் புதிய தலைமை நீதிபதியாக B.R.கவாய் பதவியேற்கவுள்ளார். 1960-ல் மகாராஷ்டிராவில் பிறந்த இவர், பம்பாய் ஐகோர்ட் நீதிபதியாக பணியாற்றியுள்ளார். பின், 2019-ல் சுப்ரீம் கோர்ட் நீதிபதியானார். இவரது குடும்பத்தினர் அம்பேத்கரின் கொள்கைகளால் ஈர்க்கப்பட்டு புத்த மதத்திற்கு மாறியவர்கள். K.G.பாலகிருஷ்ணனுக்கு அடுத்து தலைமை நீதிபதியாக பதவியேற்கும் 2-வது தலித் கவாய் என்பது குறிப்பிடத்தக்கது.
News April 29, 2025
உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய்

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக கவாய்-ஐ நியமனம் செய்து குடியரசுத் தலைவர் முர்மு உத்தரவிட்டுள்ளார். தற்போது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா மே 13 அன்றுடன் ஓய்வு பெற உள்ளார். இதனையடுத்து, புதிதாக நியமிக்கப்பட்ட பி.ஆர். கவாய் மே 14-ம் தேதி தலைமை நீதிபதியாக பதவியேற்றுக் கொள்கிறார். அடுத்த ஆறு மாதங்கள் மட்டுமே தலைமை நீதிபதியாக இருக்கப்போகும் அவர், நவ., மாதம் ஓய்வு பெறுவார் என தெரிகிறது.