News February 13, 2025
சிறந்த CM பட்டியல்: ஸ்டாலின் எத்தனையாவது இடம்?
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739424457406_1173-normal-WIFI.webp)
நாடு முழுவதும் எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்புகளின் அடிப்படையில், சிறந்த முதல்வர்களின் பட்டியலை தேசிய ஊடகமான இந்தியா டுடே வெளியிட்டுள்ளது. இதில் 5.2% வாக்குகளைப் பெற்று தமிழக முதல்வர் ஸ்டாலின் 3ஆம் இடத்தைப் பிடித்துள்ளார். 35.3% வாக்குகளுடன் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் முதல் இடத்தையும், 10.6% வாக்குகளைப் பெற்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி 2ஆம் இடத்தையும் பிடித்துள்ளனர்.
Similar News
News February 13, 2025
BREAKING: வருமான வரி மசோதா லோக்சபாவில் தாக்கல்
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739437991010_1328-normal-WIFI.webp)
புதிய வருமான வரி மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டது. FM நிர்மலா சீதாராமன் மசோதாவை தாக்கல் செய்தபோது எதிர்க்கட்சி MPக்கள் தொடர்ந்து முழக்கம் எழுப்பினர். எனினும், அமளிக்கு இடையே மசோதாவை தாக்கல் செய்து நிர்மலா சீதாராமன் உரையாற்றினார். அடுத்த நிதியாண்டில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ள நிலையில், JPCயின் பரிந்துரைக்கு மசோதா அனுப்பப்படும் என தெரிகிறது.
News February 13, 2025
8-ம் வகுப்பு மாணவி தற்கொலை: தவெக நிர்வாகி கைது
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739435245989_1241-normal-WIFI.webp)
விழுப்புரம் அருகே காதல் தொல்லையால் 8ஆம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்ட வழக்கில் தவெக சரவணன் கைது செய்யப்பட்டுள்ளார். விழுப்புரம் வடமேற்கு மாவட்ட செயலாளரின் மைத்துனரும், நரசிங்கராயன்பேட்டை பொருளாளருமான சரவணன் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்று திரும்பிய மாணவியை வழிமறித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி வற்புறுத்தியதாகவும் இதனால் மன உளைச்சலுக்கு ஆளான சிறுமி தற்கொலை செய்து கொண்டார்.
News February 13, 2025
இந்தியர்களுக்கு இஸ்ரேலில் மெகா வேலைவாய்ப்பு
![image](https://d1uy1wopdv0whp.cloudfront.net/newsimages/news_22025/1739422012790_1173-normal-WIFI.webp)
இஸ்ரேலில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் வேலை செய்து வரும் நிலையில், இன்னும் அதிக ஊழியர்கள் தேவைப்படுவதாக அந்நாட்டு தொழில்துறை அமைச்சர் நிர் பர்கத் தெரிவித்துள்ளார். போரால் சிதிலமடைந்த நாட்டை மறு உருவாக்கம் செய்ய படித்த, படிக்காத என அனைத்துத் தரப்பு ஊழியர்களும் தேவைப்படுவதாகவும், ஊழியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பாக தங்களது அரசாங்கத்திடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.