News October 9, 2025

பெர்னாட் ஷா பொன்மொழிகள்

image

▶மனிதர்களுள் இரு வகையினர் உண்டு. திறமையானவர்கள் ஒருவகை, மற்றவர்கள் திறமையைப் பயன்படுத்தாதவர்கள். ▶நகைச்சுவை உணர்ச்சி இல்லாதவர்களுக்கு வாழ்க்கை ஒரு பெருஞ்சுமை ஆகிவிடும். ▶இன்பமும் துன்பமும் பணத்தைச் சார்ந்தவை அல்ல. மனதைச் சார்ந்தவை. ▶பணம் பசியைத் தான் போக்கும். துன்ப உணர்ச்சியைப் போக்காது. ▶பெண்ணை ஒரு பொருள் போல நடத்துவதால் தான் எல்லா இன்னல்களும் வருகின்றன.

Similar News

News October 9, 2025

ஸ்டைலிஷ் தமிழச்சி ஜோனிடாவின் நியூ கிளிக்ஸ்

image

அரபிக் குத்து, செல்லம்மா பாடல் ப்ரோமோக்களில் கவனம் ஈர்த்த ஜோனிடா காந்தி தனது குரலால் மட்டுமல்ல அழகாலும் ரசிகர்களை கவர்ந்திழுப்பவர். ஜோனிடா பாடும் பாடல்கள் ஒரே நாளில் டிரெண்டிங் ஆகும் நிலையில், இவரது போட்டோஷுட் புகைப்படங்களும் இன்ஸ்டாவில் காட்டுத் தீ போல் வைரலாகும். தற்போது இவர் இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ள புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள், எப்போது சினிமாவில் நடிப்பீங்க என்று ஆசை ஆசையாக கேட்கின்றனர்

News October 9, 2025

உழவர் நலனில் திமுகவுக்கு அக்கறை இல்லை: அன்புமணி

image

நெல் கொள்முதல் நிலையங்களில் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என்று அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். இதனால் 4 லட்சத்துக்கும் அதிகமான நெல் மூட்டைகள் தேங்கி கிடப்பதாகவும், ஏற்கெனவே கொள்முதல் செய்த 15 லட்சம் நெல் மூட்டைகள் கிடங்குகளுக்கு கொண்டு செல்லப்படவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், உழவர் நலனில் திமுக அரசுக்கு அக்கறை இல்லை எனவும் அன்புமணி சாடியுள்ளார்.

News October 9, 2025

உங்களுக்கு சளி, இருமல் இருக்கா?

image

பருவநிலை மாற்றம் காரணமாக சளி, இருமல், தொண்டை வலி போன்றவை ஏற்படும். அவற்றில் இருந்து விடுபட, ◾வெதுவெதுப்பான உப்புநீரில் வாய் கொப்பளிக்க வேண்டும். ◾பூண்டுப் பற்களை நெய்யில் வறுத்து சாப்பிட வேண்டும். ◾சூடான பாலில் மஞ்சள் சேர்த்துப் பருக வேண்டும். ◾இஞ்சியில் உப்பு சேர்த்து நன்கு மென்று சாப்பிட வேண்டும். ◾கருமிளகு டீ குடிப்பது தொண்டை வலியைக் குறைக்கும். ◾குறிப்பாக, தண்ணீரை சூடாக்கி குடிக்க வேண்டும்.

error: Content is protected !!