News April 16, 2024
பெங்களூரு அணி தோல்வி, நடிகை வருத்தம்

SRH-க்கு எதிரான ஐபிஎல் போட்டியில், RCB தோல்வி அடைந்தது குறித்து 96 பட நடிகை வர்ஷா வருத்தம் தெரிவித்துள்ளார். 288 ரன்கள் என்ற இமாலய இலக்கை துரத்திய RCB அணி, தொடக்கம் முதலே அதிரடியாக விளையாடி வந்தது. ஒரு கட்டத்தில் போட்டியை வென்று விடும் என்ற நம்பிக்கையே வந்தது. ஆனால், கடைசி வரை போராடி தோல்வி அடைந்ததால், X பக்கத்தில் இதயம் நொறுங்கிய எமோஜியை பதிவிட்டு சோகத்தை வெளிப்படுத்தியிருக்கிறார் வர்ஷா.
Similar News
News December 3, 2025
ஐரோப்பாவுடன் போர் செய்ய ரெடி: புடின்

ரஷ்யா – உக்ரைன் போரை நிறுத்த USA போட்ட டீல் ரஷ்யாவுக்கு சாதகமாக இருப்பதாக ஐரோப்பா விமர்சித்திருந்தது. இதனால் அதில் சில மாற்றங்களை செய்திருந்தது USA. இதனால் கடுப்பான புடின், ரஷ்யாவால் ஏற்றுக்கொள்ள முடியாத கோரிக்கைகளை வரையறுக்க USA-வை ஐரோப்பாவை தூண்டுவதாக விமர்சித்துள்ளார். மேலும், ஐரோப்பாவுடன் போர்புரியும் எண்ணம் இல்லை என்ற அவர், ஆனால் போர்தான் வேண்டுமென்றால் அதற்கும் ரெடி என எச்சரித்துள்ளார்.
News December 3, 2025
கனமழை… அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு

கனமழை எதிரொலியாக அடுத்தடுத்து விடுமுறை அறிவிப்பு வெளியாகி வருகிறது. தொடர்ந்து மழை பெய்து வருவதால், மாணவர்கள் பாதுகாப்பு கருதி கடலூர் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்படுவதாக அம்மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார். ஏற்கெனவே, சென்னை, திருவள்ளூர், காஞ்சி, செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சியில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
News December 3, 2025
Cinema 360°: ₹62.47 கோடி வசூலித்த தனுஷின் இந்தி படம்

*அனுபமாவின் ‘லாக்டவுன்’ படத்திற்கு U/A சான்றிதழ் தரப்பட்டுள்ளது *தனுஷின் ‘தேரே இஷ்க் மே’ இந்தியாவில் மட்டும் இதுவரை ₹62.47 கோடி வசூலித்துள்ளதாக அறிவிப்பு *திவ்ய பாரதி நடித்துள்ள ‘GOAT’ டீசர் வெளியாகியுள்ளது. *அவெஞ்சர்ஸ்: டூம்ஸ் டே டீசர் டிச.7-ம் தேதி ரிலீசாகிறது. *பசுபதியின் ‘குற்றம் புரிந்தவன்’ வெப் தொடர் டிச.5 முதல் சோனி லைவ் ஓடிடியில் ஸ்ட்ரீமிங் ஆகவுள்ளது.


