News April 13, 2025
பெங்களூரு அணி 4-வது வெற்றி.. கோலி புதிய சாதனை!

ராஜஸ்தான் நிர்ணயித்த 174 ரன்கள் இலக்கை எளிதில் எட்டிப் பிடித்து 4-வது வெற்றியை பெங்களூரு அணி பதிவு செய்துள்ளது. முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தானில் ஜெய்ஸ்வால்(75), பராக்(30), துருவ் ஜுரல்(35*) சிறப்பாக விளையாடினர். இதனை அடுத்து களமிறங்கிய பெங்களூரு வீரர்கள் பில் சால்ட்(65), கோலி(62*) அரைசதம் அடித்ததால் அந்த அணி ஈஸியாக வென்றது. டி20 போட்டிகளில் 100 முறை அரைசதம் அடித்து கோலி சாதனை படைத்துள்ளார்.
Similar News
News December 4, 2025
உதகை: பனியின் தாக்கத்தால் விவசாயம் பாதிப்பு

உதகை பகுதியில் பனியின் தாக்கத்திலிருந்து பாதுகாக்க, விவசாயிகள் ஸ்பிரிங்லர் முறையில் கேரட் செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சி பராமரித்து வருகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் மலை தோட்ட காய்கறிகளில் கேரட் விவசாயம் அதிக அளவில் சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது பனியின் தாக்கம் அதிகரித்துள்ளதால், மலை தோட்ட காய்கறிகள் பாதிப்படைந்து வருகின்றன.

ராணிப்பேட்டை: இரவு ரோந்துப் பணி நிலவரம்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று (டிச.3) இரவு 10 மணி முதல் காலை 6 மணி வரை இரவு ரோந்து பணிக்கு காவல் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் தங்கள் அவசர காலத்திற்கு உங்கள் உட்கோட்ட அதிகாரியை மேற்கண்ட தொலைபேசி வாயிலாக அழைக்கலாம்., அல்லது 100-ஐ டயல் செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.