News May 4, 2024
ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியது பெங்களூரு அணி

2024 ஐபிஎல் சீசனில் முதல் முறையாக பெங்களூரு அணி ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியுள்ளது. RCB வீரர் வைஷாக் வீசிய 20ஆவது ஓவரின் முதல் பந்தில் சுதார் அவுட்டாக, 2ஆவது பந்தில் மோஹித் ஷர்மா ஒரு ரன் எடுக்க முயன்றபோது ரன் அவுட்டானார். 3ஆவது பந்தை எதிர்கொண்ட GT வீரர் சங்கர், முகமது சிராஜிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார். இதன்மூலம், 20ஆவது ஓவரின் முதல் 3 பந்துகளில் GT அணி 3 விக்கெட்டை இழந்ததுடன் ஆல்அவுட்டானது.
Similar News
News November 17, 2025
பாஜகவுக்கு ஆயுதங்களை சப்ளை செய்யும் கவர்னர்: MP

மேற்கு வங்கத்தில் TMC தொண்டர்களை அழிக்க கவர்னர் ஆனந்த போஸ், ஆயுதங்களை பாஜகவினருக்கு வழங்குகிறார் என மே.வங்க MP கல்யாண் பானர்ஜி பேசியுள்ளார். கவர்னர் மாளிகையில் கிரிமினல்களுக்கு அடைக்கலம் கிடைப்பதாகவும், இதையெல்லாம் நிறுத்த வேண்டும் எனவும் குற்றம்சாட்டியுள்ளார். இந்நிலையில், கல்யாண் மன்னிப்பு கேட்கவில்லை எனில் சட்ட நடவடிக்கை எடுப்பேன் என கவர்னர் எச்சரித்துள்ளார்.
News November 17, 2025
BREAKING: அதிமுகவுடன் கூட்டணியை உறுதி செய்தார்

சேலம் நெடுஞ்சாலை நகர் இல்லத்தில் EPS-ஐ தமிழ் மாநில காங்., தலைவர் ஜி.கே.வாசன் சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது அதிமுக தலைமையிலான NDA கூட்டணியை உறுதிசெய்த வாசன், தொகுதி பங்கீடு குறித்தும் ஆலோசித்துள்ளார். பின்னர் அவர் அளித்த பேட்டியில், NDA கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வரவிருப்பதாகவும், 2026-ல் பிஹாரில் வென்றதை விட அதிக இடங்களில் NDA வெற்றிபெறும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
News November 17, 2025
வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயங்காது

கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயக்கப்படாது என ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. கேரளாவில் சமீபத்தில் ஆம்னி பஸ்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதன் எதிரொலியாக, கடந்த 7 நாள்களுக்கு மேல் மாநிலங்களுக்கு இடையேயான ஆம்னி பஸ்கள் இயங்கவில்லை. இந்நிலையில், வெளிமாநிலங்களுக்கு ஆம்னி பஸ்கள் இயங்காது என்றும், முதல்வர் இவ்விவகாரத்தில் தலையிட வேண்டும் எனவும் கூறியுள்ளது.


