News March 22, 2025
பெங்களூரு அணிக்கு 175 ரன்கள் இலக்கு!

18வது ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் கொல்கத்தா – பெங்களூரு அணிகள் விளையாடி வருகின்றன. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா அணி தொடக்கத்தில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. கேப்டன் ரஹானே 56 ரன்களும், நரேன் 44 ரன்களும் எடுத்தனர். 20 ஓவர்கள் முடிவில் அந்த அணி 174 ரன்கள் எடுத்துள்ளது. பெங்களூரு அணி தரப்பில் க்ருணால் பாண்டியா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். வெல்லப் போவது யார்?
Similar News
News March 23, 2025
இரவு 10 மணி வரை மழை கொட்டும்

தமிழகத்தின் 9 மாவட்டங்களில், இரவு 10 மணிவரை மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், மதுரை, விருதுநகர், தென்காசி, தஞ்சாவூர் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ஒன்றிரண்டு இடங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதனால் சாலைகளில் மழைநீர் தேங்கவும், போக்குவரத்து பாதிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளதால், அதற்கேற்ப திட்டமிட்டுக் கொள்ளவும்.
News March 23, 2025
‘மகாத்மா காந்தியின் சீடர்’ கிருஷ்ண பாரதி காலமானார்

காந்தீயக் கொள்கையின் தீவிரப் பற்றாளரும், சமூக செயல்பாட்டாளருமான கிருஷ்ண பாரதி (92) இன்று காலமானார். மகாத்மா காந்தியின் சீடராக தன் சமூகப் பணிகளை தொடங்கிய இவர், அடித்தட்டு மக்களுக்கு, குறிப்பாக தலித் மக்களின் கல்வி, முன்னேற்றத்துக்காக பாடுபட்டார். இவரின் பெற்றோரும் சுதந்தரப் போராட்ட வீரர்கள் தான். பிரதமர் மோடி ஆந்திரா சென்றபோது, இவரிடம் ஆசி வாங்கியது குறிப்பிடத்தக்கது. ஆழ்ந்த இரங்கல்!
News March 23, 2025
Ration cardல் மொபைல் எண் மாற்றனுமா? இத பண்ணுங்க

ரேஷன் கார்டு என்பது ஒரு குடும்பத்துக்கு அத்தியாவசியமான ஒன்று. அதில் மொபைல் எண் இணைக்கவோ அல்லது மாற்றவோ வேண்டும் என்றால் என்ன செய்வது என தெரியாமல் தவிப்பவர்களுக்குத்தான் இந்த தகவல். இதனை ஆன்லைன் மூலம் செய்ய முடியாது. நீங்கள் தாலுகா அலுவலகத்துக்கு சென்று அதற்கான விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும். விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் விரைவில் கோரிக்கை நிறைவேற்றப்படும்.