News March 21, 2024
ஷோபா மீது பெங்களூரு போலீசார் வழக்குப்பதிவு

மத்திய அமைச்சர் ஷோபா கரந்த்லாஜே மீது பெங்களூரு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ராமேஸ்வரம் கஃபே உணவகத்தில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் தமிழர்களை தொடர்புப்படுத்தி அவர் பேசியது சர்ச்சையான நிலையில், திமுக புகாரின் பேரில் அவர் மீது நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது. அதைத் தொடர்ந்து சர்ச்சையாக பேசுதல் உள்ளிட்ட பிரிவுகளில் ஷோபா மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
Similar News
News January 18, 2026
கஞ்சாவால் சீரழியும் இளைஞர்கள்: அன்புமணி

TN-ல் கஞ்சா சீரழிவை கட்டுப்படுத்த DMK அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என அன்புமணி சாடியுள்ளார். X பதிவில் அவர், திருவள்ளூரில் கஞ்சா போதை கும்பல்கள் நடத்திய தாக்குதல்களை சுட்டிக்காட்டி, இதுபற்றி CM ஸ்டாலின் வாயைக் கூட திறக்க மறுப்பதாக தெரிவித்துள்ளார். இளைஞர்களை போதைக்கு அடிமையாக்கி சமூகத்திற்கு எதிரானவர்களாக மாற்றிய ஒற்றை காரணமே, DMK-ஐ ஆட்சியிலிருந்து அகற்றுவதற்கு போதுமானது என்றும் அவர் கூறியுள்ளார்.
News January 18, 2026
தமிழகத்தில் தரமான பேராசிரியர்கள் இல்லை: ரவி

பள்ளிகல்வி, உயர்கல்வி, பிஎச்டி ஆகிய நிலைகளில் தரமான கல்வியை உறுதிசெய்ய வேண்டும் என கவர்னர் RN ரவி தெரிவித்துள்ளார். மேலும், பொறியியல் கல்லூரிகளில் பணியாற்றும் பல பேராசிரியர்கள் தகுதிவாய்ந்தவர்களாக இல்லை என்றும், அதனால் தரமான பொறியாளர்களை உருவாக்க முடியவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார். அதேநேரத்தில் உயர்கல்வி சேரும் மாணவர்கள் விகிதத்தில் TN தான் முதலிடத்தில் உள்ளது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
News January 18, 2026
BIG NEWS: அதிமுக கூட்டணியில் இணைவதாக அறிவித்தார்

தேவேந்திர குல வேளாளர்கள் கூட்டமைப்பின் பொதுச்செயலாளர் சந்தன பிரியா பசுபதி பாண்டியன், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார். EPS-ஐ நேரில் சந்தித்து தனது ஆதரவை கூறியுள்ளார். இந்த ஆதரவு, தென் மாவட்டங்களில் இது அதிமுக கூட்டணிக்கு கூடுதல் பலமாக பார்க்கப்படுகிறது.


