News March 27, 2024
பெங்களூரு குண்டுவெடிப்பு: தமிழ்நாட்டில் என்ஐஏ சோதனை

பெங்களூரு குண்டுவெடிப்பு சம்பவம் தொடர்பாக தமிழ்நாட்டில் 5 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது. பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே ஓட்டலில் கடந்த 1ஆம் தேதி நடந்த குண்டுவெடிப்பில் 10 பேர் காயமடைந்தனர். இதில் தொடர்புடைய 2 ஐஎஸ் தீவிரவாதிகள், சென்னையில் தங்கியிருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தன. இந்நிலையில், இன்று மண்ணடி உள்ளிட்ட 5 இடங்களில் என்ஐஏ சோதனை நடத்தி வருகிறது.
Similar News
News December 31, 2025
2025-ல் மாவட்டம் வாரியாக நாய்க்கடி பாதிப்பு!

2025-ம் ஆண்டு தமிழ்நாடு முழுவதும் 6.23 லட்சம் பேர் நாய் கடியால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 33 பேர் உயிரிழந்துள்ளனர். 2024-ல் இருந்ததை விட 2025-ல் 1.5 லட்சம் அதிகரித்துள்ளது. இந்நிலையில், அதிகளவில் நாய்க்கடி சம்பவங்கள் நடைபெற்ற டாப் மாவட்டங்களை, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. உங்கள் பகுதியில் நாய்கள் தொல்லை இருக்கிறதா? கமெண்ட்ல சொல்லுங்க.
News December 31, 2025
New Year வாழ்த்து செய்தியை கிளிக் செய்யாதீங்க

ஒரு புத்தாண்டு வாழ்த்து செய்தி, உங்களது வங்கி கணக்கில் இருக்கும் மொத்த பணத்தையும் காலி செய்யும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆமாம், வாட்ஸ் ஆப்பில் புத்தாண்டு வாழ்த்துடன் APK ஃபைலை உருவாக்கி, ஒரு கும்பல் மொபைலை ஹேக் செய்து பணத்தை கொள்ளையடிக்கிறதாம். இதனால் வாட்ஸாப்பில் வரும் APK ஃபைலை கிளிக் செய்ய வேண்டாம் என சைபர் கிரைம் போலீசார் எச்சரித்துள்ளனர்.
News December 31, 2025
TN அரசுக்கு அளவுக்கு மிஞ்சிய கடனா? சிவசங்கர் விளக்கம்

TN அரசு மற்ற மாநிலங்களை விட கூடுதல் கடன் பெற்றதாக EPS உள்பட எதிர்கட்சியினர் வைத்த குற்றசாட்டுக்கு அமைச்சர் சிவசங்கர் பதில் அளித்துள்ளார். ஒரு மாநிலம் எவ்வளவு கடன் வாங்க முடியும் என்பதற்கு மத்திய அரசு வரையறுத்துள்ள குறியீடுக்கு கீழ்தான், TN கடன் பெற்றுள்ளதாக அவர் விளக்கமளித்துள்ளார். எதிர்கட்சியினர் தமிழகத்துடன் ஒப்பிடும் பல மாநிலங்கள், அளவுக்கு மீறி கடன் வாங்கியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.


