News May 3, 2024
பாலியல் புகாருக்கு மே.வங்க ஆளுநர் மறுப்பு

பணிப் பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எழுந்த குற்றச்சாட்டை மே.வங்க ஆளுநர் ஆனந்தா போஸ் மறுத்துள்ளார். தன் மீது குற்றச்சாட்டு கூறி யாராவது ஆதாயம் அடைய விரும்பினால் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறுவதாகவும் அவர் தெரிவித்தார். ஆளுநர் மாளிகையில் பணிபுரிந்த பெண் ஒருவர் அவர் மீது புகார் கொடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், மம்தா கட்சியினர் ஆளுநருக்கு எதிராகப் போராட்டம் நடத்த உள்ளனர்.
Similar News
News January 30, 2026
தொகுதி மாறும் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி!

புதுச்சேரி CM ரங்கசாமி இம்முறையும் 2 தொகுதிகளில் போட்டியிடவுள்ளதாக கூறப்படுகிறது. 2011-ல் இந்திராநகர், கதிர்காமம் தொகுதிகளில் வென்ற அவர், 2016-ல் ஒரு தொகுதியில் மட்டும் போட்டியிட்டு எதிர்க்கட்சி தலைவரானார். இதனால் சென்டிமென்டாக, 2021-ல் தட்டாஞ்சாவடி, ஏனாம் என மீண்டும் 2 தொகுதிகளில் போட்டியிட்டார். இம்முறையும் மங்கலம், கதிர்காமம் தொகுதிகளில் போட்டியிட அவர் திட்டமிட்டுள்ளாராம்.
News January 30, 2026
மீண்டும் 16,000 பேரை நீக்கிய அமேசான்

US, UK, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் இருந்து 16,000 பேரை அந்நிறுவனம் வேலையில் இருந்து நீக்கியுள்ளது. குறிப்பாக இந்தியாவின் பெங்களூரு, சென்னை, ஹைதராபாத்தில் இருந்து அதிகபடியான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேசமயம் அந்த ஊழியர்களுக்கு தேவையான உதவிகளை செய்து தரவும் அமேசான் முன்வந்துள்ளது. ஆட்குறைப்பு ஒருபக்கம் நடக்க மறுபுறம் பல ஆயிரம் கோடிகளை AI நிறுவனங்களில் அமேசான் செய்து வருகிறது.
News January 30, 2026
திமுகவுக்கு மீண்டும் மீண்டும் அழுத்தம் கொடுக்கும் காங்.,

திமுக-காங்கிரஸ் கூட்டணி இடையே புகைந்துகொண்டிருக்கிறது. இந்நிலையில், எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவதை போல, ‘கூட்டணியில் விரிசல் இல்லை என்றாலும் ஆட்சியில் பங்கு என்பதில் உறுதியாக உள்ளோம்’ என காங்., MLA ராஜேஷ்குமார் கூறியுள்ளார். ஏற்கெனவே இதற்கு திமுக ஒப்புக்கொள்ளவில்லை, இந்நிலையில் காங்., தன்னுடைய நிலைப்பாட்டில் விடாபிடியாக இருப்பதால் கூட்டணியில் மேலும் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.


